GxCeMNmW0AUPLsW

நடிகை மற்றும் இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இப்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.

சமீபத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தொடர்பாகப் பேசியிருந்தார்.

அங்கு அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகப் பரவியது.

அதில் அவர், “கமலை எனக்குப் பிடிக்கும். அதை அவரிடம் தெரிவிக்க முயன்றபோது அவர் தங்கை என்று சொல்லிவிட்டார்,” எனக் கூறியிருக்கிறார்.

அவர் பேசிய விஷயம் வைரலானதைத் தொடர்ந்து, தற்போது அதற்கு விளக்கமும் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், “நான் 16ஆம் வயதில் நிச்சயதார்த்தம் செய்து, 18ஆம் வயதில் திருமணம் செய்தேன்.

42 வயது வரை எனக்கு சினிமா உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. மற்ற பலரைப் போலவே, நானும் நட்சத்திரங்களை ஒரு ரசிகையாகவும், குழந்தைபோன்ற ஆச்சரியத்துடனும் பார்த்தவள்தான்.

45 வயதில் ஒரு பிரபல நடிகரை நேரில் சந்தித்தபோது, உண்மையிலேயே ‘star-struck’ ஆகிவிட்டேன்.

அவர் என்னைப் பார்த்து, ‘என் சகோதரி மாதிரி இருக்கிறீர்கள்’ என்று சொன்னதும், என் நண்பர்கள் நகைச்சுவையாகக் கலாய்த்தார்கள்.

இதைத்தான் நான் ‘குக் வித் கோமாளி’யில் நன்றாக ரசித்துப் பகிர்ந்தேன். இதைத் தவறாகப் புரிந்து, செய்தியாக மாற்றிப் பரப்புவது நியாயமற்றது மட்டுமல்லாமல், மிகுந்த நாகரிகமற்றதும்கூட!” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest