
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பைசன்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
த்ருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் தனுஷின் 56-வது படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தை ஐசரி கே. கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மாரி செல்வராஜ் தனுஷின் 56-வது திரைப்படத்தை இயக்குவது குறித்து ஏற்கெனவே, ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் பகிர்ந்திருந்தார்.
தற்போது, விருது விழாவின் முழுக் காணொளி ஆனந்த விகடன் யூடியூப் சேனலில் வெளியானப் பிறகு அந்தத் தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
அந்தக் காணொளியில் மாரி செல்வராஜ் பேசும்போது, “பைசன் படத்திற்குப் பிறகு நான் தனுஷ் சாரை வைத்து இயக்கவிருக்கிறேன்.
‘கர்ணன்’ திரைப்படம் நடந்த சமயத்திலேயே நாங்கள் புதியதாக மற்றுமொரு படத்தை இயக்க முடிவு செய்துவிட்டோம். சில காரணங்களால் அது தாமதமானது. அது பெரிய ப்ராஜெக்ட்.

எளிமையான கதையைப் பெரிய படமாகப் பண்ண வேண்டும் என ஆசைப்பட்ட படம் அது.
அது முக்கியமான திரைப்படமாக இருக்கும். அப்படத்தின் வேலைகளும் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.
அது என்னுடைய மைல்கல் திரைப்படமாக இருக்கும்,” எனப் பேசினார்.
முழுக் காணொளியைக் காண கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…