SAVE20250802192911

சென்னையில் நடந்த ‘Maxivision’ என்கிற தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் தோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். மருத்துவமனையை திறந்து வைத்து விட்டு கிரிக்கெட் சார்ந்து சில முக்கியமான விஷயங்களை தோனி பேசியிருந்தார்.

Dhoni
Dhoni

தோனி பேசியதாவது, ‘சென்னையுடன் எனக்கு நீண்ட நாள் உறவு இருக்கிறது. ஐ.பி.எல் 2008 இல்தான் தொடங்கியது. அதற்கு முன்பே சென்னை எனக்கு ஸ்பெசலானதுதான். 2005 இல் என்னுடய டெஸ்ட் அறிமுகம் இங்கேதான் நடந்தது. ஐ.பி.எல் க்காக ஒவ்வொரு ஆண்டும் 45-50 நாட்களை இங்கே செலவழிக்கிறேன். இங்கிருக்கும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உணர்ந்திருக்கிறேன்.

சென்னை ரசிகர்களின் ஆதரவு வெகுவாக இருக்கும். எந்த சீசனும் எங்களுக்கு சுலபமானதாக இருந்ததில்லை. கடைசி நான்கு லீக் போட்டிகளில் 2-3 போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில்தான் இருப்போம். அந்த மாதிரியான சமயங்களில் ரசிகர்களின் ஆதரவு ஊக்கமாக இருக்கும்.இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்திருப்பார்கள். அவர்களையெல்லாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். அது கொஞ்சம் சவாலனதுதான்.

Dhoni
Dhoni

நான் கேப்டனாக இருந்தபோது வீரர்களின் ஆதரவும் நிர்வாகத்தின் ஆதரவும் அந்த சவாலை சமாளிக்க உதவியாக இருந்தது.கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் பேப்பரில் உங்கள் அணி எப்படி இருக்கிறது என்பது முக்கியமில்லை. களத்தில் எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம். ஆம், கடந்த இரண்டு சீசன்கள் எங்களுக்கு சரியாக அமையவில்லைதான். ஆனால், எங்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம். கடந்த 14-15 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறோம் என்பதை யாரும் மதிக்கமாட்டார்கள். இப்போது என்ன செய்கிறோம் என்றுதான் பார்ப்பார்கள். எங்களின் பேட்டிங் ஆர்டர் இப்போது கொஞ்சம் சரியாகியிருக்கிறது. ருத்துராஜ் காயத்திலிந்து மீண்டு வந்துவிடுவார். மினி ஏலத்தில் அணியின் ஓட்டைகளை அடைக்கும் வகையில் வீரர்களை எடுக்க வேண்டும்.

ஓய்வு பெறும் வயது என்று ஒன்று உண்டு. அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பை கொடுத்துவிட்டு செல்வது நல்லதுதான்.’ என்றார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest