G1bddH8bcAAx9pN

Aமிகவும் எதிர்பார்க்கப்பட்ட `த்ரிஷ்யம் 3′ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது.

முதல் இரண்டு பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த மூன்றாம் பாகத்திற்கு பெருமளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இன்று இப்படத்தின் பூஜை கேரளாவிலுள்ள எர்ணாகுளத்தில் நடைபெற்றது.

Drishyam 3 - Mohanlal
Drishyam 3 – Mohanlal

பூஜையை முடித்த கையோடு டெல்லிக்கு விரைகிறார் மோகன் லால். நாளை நடைபெறவுள்ள 71வது தேசிய விருது விழாவில் அவர் தாதா சாகெப் பால்கே விருது பெறவிருக்கிறார்.

பூஜையை முடித்தக் கையோடு இந்த மூன்றாம் பாகம், ஜார்ஜ் குட்டியின் வாழ்கையின் எப்படியான பக்கங்களைப் புரட்டும் என்பது குறித்து அப்டேட் தந்திருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

அவர் பேசுகையில், “இதற்கு முந்தைய இரண்டு பாகங்களில் ஜார்ஜ் குட்டிக்கும், இன்ஸ்பெக்டர் கீதாவுக்கும் இடையேதான் கதை பயணித்தது.

இந்த பாகம், 4, 5 வருடங்களுக்குப் பிறகு அந்தக் குடும்பத்திற்கு என்ன நடந்தது என்ற விஷயங்களையும் காட்சிப்படுத்தும்

இந்தப் படத்தின் படமாக்கும் பணி எப்போது முடியும் என்பது நமக்குத் தெரியவில்லை. அது முடிந்து மீதமுள்ள பணிகள் முடிவடைந்தவுடன், எல்லாவற்றையும் தீர்மானிப்பது தயாரிப்பாளர்தான்.

நான் `த்ரிஷ்யம்’ படத்தை ஒரு த்ரில்லராக ஒருபோதும் கருதவில்லை. அதை நான் ஒரு ஃபேமிலி டிராமாவாகவே கருதுகிறேன். அது இரண்டு குடும்பங்களின் கதை.

இந்த பாகம் ஜார்ஜ்குட்டி குடும்பத்தின் உணர்ச்சிப் போராட்டங்கள், பின்விளைவுகள் போன்ற அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றியது.

Drishyam 3 - Mohanlal
Drishyam 3 – Mohanlal

தாதா சாகெப் பால்கே விருது பெறும் மோகன் லாலை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர் சினிமாவை தாண்டி இந்த சமூகத்திற்கும் பெரும் பங்காற்றியிருக்கிறார்.

இந்த விருதைப் பெறுவதற்கு அனைத்து வழிகளிலும் அவர் தகுதியானவர்.” எனப் பேசியிருக்கிறார்.

படத்தின் பூஜை புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு நடிகர் மோகன் லால், “ஜார்ஜ்குட்டியின் உலகத்தை மீண்டும் உயிர்ப்பிக்கிறோம். இன்று பூஜையுடன் `த்ரிஷ்யம் 3′ படம் தொடங்கியது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest