
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்டிற்குத் தனது சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரமே காரணம் என இந்திய வீரர் கே.எல். ராகுல் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் அபாரமாக விளையாடி தன்னுடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். அது மட்டும் இல்லாமல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு சதத்தை அடித்து டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.
மறுமுனையில் ரிஷப் பண்ட் அதிரடி காட்டி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 74 ரன்களில் அவர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இந்நிலையில் ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்டிற்குத் தனது சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரமே காரணம் என இந்திய வீரர் கே.எல். ராகுல் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

“அது ஒரு விரும்பத்தகாத நிகழ்வு. மதிய உணவு இடைவேளைக்கு முன் நான் சதம் அடிக்க வேண்டும் என்று பண்ட்டிடம் கூறினேன். பஷீர் கடைசி ஓவரை வீசியதால், எனக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பந்தை நேராக ஃபீல்டரிடம் அடித்துவிட்டேன். அது நான் பவுண்டரிக்கு அடித்திருக்க வேண்டிய பந்து.
பிறகு, நான் ஸ்ட்ரைக்குக்கு வரவேண்டும் என்று பண்ட் நினைத்தார். நடந்ததோ வேறு, அந்த ரன் அவுட் போட்டியின் வேகத்தையே மாற்றிவிட்டது. அது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்டிற்குத் தனது சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரமே காரணம்” என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…