
மலையாளம் கடந்து தன் நடிப்புத் திறமையால் இந்தியளவில் புகழ் பெற்றவர் நடிகர் பஹத் பாசில். தமிழில் ‘மாரீசன்’ பட வெளியீட்டுக்கு தயாராகி வருகிறார். இந்தப் படம் ஜூலை 25-ம் தேதி திரைக்கு வர உள்ளது. நடிகர் பஹத் பாசில் எப்போதுமே சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பவர். தற்போது அதனையும் கடந்து, அவர் ஸ்மார்ட் போன் கூட பயன்படுத்துவதில்லை என்ற செய்திகள் வெளியாகி வைரலானது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் நடிகர் வினய் போர்ட் அளித்த பேட்டி ஒன்றில், ”நடிகர் பஹத் பாசில் நவீனமற்ற பட்டன் போனை பயன்படுத்துகிறார்’ எனப் பகிர்ந்துகொண்டார். இதற்கிடையில் நடிகர் பஹத் பாசில் செல்போனில் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அதில், நடிகர் வினய் போர்ட் கூறியது போலவே, பட்டன் போனையே பஹத் பாசில் பயன்படுத்துகிறார். இந்தக் காட்சி ரசிகர்களிடம் ஆச்சர்யத்தையும் அதே நேரம் வியப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது நடிகர் பஹத் பாசில் பயன்படுத்தும் போன் சாதாரண ஃபீச்சர் போன் கிடையாது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் வெளியிடப்பட்டபோது சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள அதி-ஆடம்பர போன். இது தொடர்பாக வெளியான தகவலின்படி, “நடிகர் பஹத் பாசில் பயன்படுத்தும் செல்போன் வெர்டு அசென்ட் டிஐ ஆகும். முதன்முதலில் 2007-ல் அறிவிக்கப்பட்டு 2008-ல் இந்தப் போன் வெளியிடப்பட்டது. இந்த மாடல் செல்போன் உற்பத்தி தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்த செல்போனின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் பிரீமியம். டைட்டானியம், சபையர் படிகங்கள், லெதர் தோல் ஆகியவற்றைப் பயன்படுத்தி அந்த செல்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், இதன் ஆரம்ப விலை ரூ.5.54 லட்சமாக இருந்தது. அதன் பின்னர் அது நிறுத்தப்பட்டிருந்தாலும், இந்த செல்போன் தற்போது ரூ.1–1.5 லட்சத்திற்கு விற்கப்படுவதை கவனிக்க முடிகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…