
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில், ‘கழுகு’ பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் ‘ப்ரீடம்’.
இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று (ஜூலை 8) இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய சசிகுமார், “1995-ல் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். கற்பனை கலந்த கதாபாத்திரங்கள் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை வைத்துதான் இயக்குநர் இதை இயக்கியிருக்கிறார்.
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கதாநாயகனாக இருப்பதைவிட கதையின் நாயகனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் இதுபோன்ற படங்களில் நடிக்க முடிகிறது” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…