Event-Photo

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், நகை விற்பனைகளுக்கு அப்பாற்பட்டு சமூகத்தில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதையே எப்போதும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக சமூகப் பொறுப்பை தன் அடிப்படை நோக்கமாகக் கொண்ட இந்த நிறுவனம், மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் சமூகங்களை வலுப்படுத்தவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

GRT
GRT

சமூகத்திற்கு நன்மை தரும் ஒவ்வொரு முயற்சியைப் பெருமையாகக் கருதும் ஜிஆர்டி நிறுவனம் கருணையுடனும் நேர்மையுடனும் சமூகத்திற்குச் சேவை செய்வதில் எப்போதும் தனது முழு ஈடுபாட்டை அளித்து வருகிறது.

இந்தக் கண்ணோட்டத்திற்கிணங்க, பெங்களூரியில் உள்ள சாய் ஆஷ்ரயா அறக்கட்டளைக்கு ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ரூ.55 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளது.

ஜிஆர்டியின் இந்த உன்னத முயற்சியின் மூலம் சாய் ஆஷ்ரயா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான இதய சிகிச்சைகள் மேற்கொள்ள அறக்கட்டளைக்கு வலுவான ஆதரவு கிடைக்கும்.

இந்த முயற்சி குறித்துப் பேசுகையில், ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ர். ஆனந்த் அனந்தபத்மநாபன் அவர்கள், ஜிஆர்டியில் எங்கள் பொறுப்புகள் வணிகத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை நாங்கள் உணர்கிறோம் ஆரோக்கியமும் நல்வாழ்வும் ஒவ்வொருவருக்கும் அடிப்படையானவை.

இந்த அத்தியாவசிய சேவைகளை வழங்கும் சாய் ஆஷ்ரயா அறக்கட்டளைக்கு நாங்கள் ஆதரவளிப்பதில் எங்களுக்குப் பெருமை. உண்மையான பாரம்பரியம் என்பது எங்கள் நகைகளில் மட்டும் அல்ல. நாங்கள் சேவை செய்யும் மக்களுக்காக உருவாக்கும் நலனிலும் அவர்களின் பிரகாசமான எதிர்காலங்களிலும் இருக்கிறது என்று கூறினார்.

அதேபோல், ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இது குறித்து மேலும் கூறுகையில், “ஜி.ஆர்டியின் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையாலும் நல்லெண்ணத்தாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது சமூகப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் ஒவ்வொரு முயற்சியும், அந்த நம்பிக்கையை மீண்டும் சமூகத்திற்கு திருப்பித் தரும் எங்கள் வழியாகும்.

GRT
GRT

சாய் ஆஷ்ரயா அறக்கட்டளையுடன் எங்களது இந்த இணைப்பு, வணிகங்கள் வளர்வது அவை சேவை செய்யும் சமூகங்களுடன் சேர்ந்து வளரும்போது மட்டுமே உறுதிப்படும் என்ற எங்கள் பெரிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்

1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், அதன் கைவினைத்திறன், வடிவமைப்பு சிறப்பம்சம் மற்றும் காலத்தால் அழியாத மதிப்புகளுக்காகப் போற்றப்படுகிறது. இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை விற்பனையகங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.

தங்க நகைகள், வைரங்கள், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களில் நேர்த்தியான கலெக்ஷன்களை வழங்கும் இந்த நிறுவனம், பல தலைமுறைகளாக நம்பிக்கையின் பாரம்பரியத்தை கட்டியெழுப்பியுள்ளது. சிங்கப்பூரில் ஒரு ஷோரூம் மற்றும் தென் இந்தியா முழலுவதும் முழலுவதும் ஓக்கும் மேற்பட்ட ஷோரூம்களைக் கொண்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் கலைநயம் மற்றும் உண்மைத்தன்மையை ஒன்றிணைத்து, தான் சேவை செய்யும் சமூகங்களுக்கான அதன் நீடிதீத அர்ப்பணிப்பைத் தொடர்ந்து காக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest