கின்னஸ் உலக சாதனைகள் புத்தகம் 1955-ல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் மனிதர்கள் செய்யும் அசாத்திய சாதனைகள், அரிய திறமைகள், தனித்துவமான சாதனைகள் ஆகியவற்றை இதில் ஆவணப்படுத்துகிறது. மிக வேகமான, மிக உயரமான, மிக பெரிய என பல்வேறு வகை சாதனைகளை கின்னஸ் அங்கீகரிக்கிறது.
கின்னஸ் புத்தகத்தை அயர்லாந்தைச் சேர்ந்த ஹக் பீவர் என்பவர் தான் உருவாக்கினார். கின்னஸில் ஆண்டுதோறும் புதிய பதிப்புகள் வெளியிடப்படுகின்றன. விண்ணப்பித்து, ஆதாரங்களுடன் சாதனைகளை நிரூபித்தால் அங்கீகாரம் கிடைக்கும்.
கின்னஸ் தற்போது 2025-ம் ஆண்டின் நிகழ்த்தப்பட்ட சிறந்த சாதனைகளை வீடியோவாக வெளியிட்டுள்ளது. அதில், உலகின் உயராமான நாயை, உலகின் குள்ளமான நாய் சந்திக்கும் நிகழ்வு, ஒரே நேரத்தில் 8 மிகப்பெரிய கூலிங் டவர்ஸ் வெடி வைத்து தகர்க்கப்பட்ட நிகழ்வு, மிகவும் கனமான தூண்களை இரு கைகளிலும் பிடித்து நிற்பது உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் இடம்பிடித்துள்ளன.