WhatsApp-Image-2025-09-22-at-4.29.16-PM

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வெப்சீரிஸ் `ஹார்ட் பீட்’. இந்தச் சீரிஸ் பலருக்கும் ஃபேவரைட். இதில் கணேஷ் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் கவிதாலயா கிருஷ்ணன். அவரைச் சந்தித்தோம்.

கவிதாலயா கிருஷ்ணன்
கவிதாலயா கிருஷ்ணன்

“இந்தச் சீரிஸ் வந்தப்ப பெருசா ஆர்வம் இல்ல. அந்த டைம்ல நான் கொஞ்சம் பிசியா இருந்தேன். ரைட்டர் தீபக் சுந்தர்ராஜனும், எக்ஸிகியூடிவ் புரொடியூசர் ஷாம் ரெண்டு பேரும் என்னை மீட் பண்ண வந்தாங்க. இந்தச் சீரிஸோட ஒன்லைன் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

ஆரம்பத்தில் இந்த அளவுக்கு ரீச் ஆகும்னு சத்தியமா நான் எதிர்பார்க்கல. நான் கிட்டத்தட்ட 85,000 ஹவர் டெலிவிஷன்ல பண்ணியிருக்கேன். 200 படங்கள் பண்ணிட்டேன். 2500 நாடகங்கள் பண்ணியிருக்கேன். இந்த அளவுக்கு ரீச் வரும்னு எதிர்பார்க்கல. கடைசி எபிசோட் பார்த்துட்டு நிறைய போன் கால் வந்தது.

200 படங்களில் கிடைக்காத புகழ் இந்தச் சீரிஸ்ல எனக்குக் கிடைச்சிருக்கு. எனக்குப் பெருசா நடிக்கத் தெரியாது. இயல்பாகத்தான் கேரக்டரில் இருப்பேன். அதே மாதிரி ஸ்கிரிப்ட்ல உள்ள டயலாக் அப்படியே பேச மாட்டேன். என்னங்கிறதைப் புரிஞ்சுகிட்டு நானாகத்தான் பேசுவேன். அதுக்கு ஸ்பேஸ் கொடுத்தாங்க. நான் நானா இருக்கிறதுக்கான சுதந்திரம் கிடைச்சது” என்றவரிடம் தீபா பாலு குறித்துக் கேட்டோம்.

“எனக்கு தீபாவை ரொம்ப பிடிக்கும். என் மூத்தப் பொண்ணுக்கும் அவங்களுக்கும் ஒற்றுமை உண்டு. நல்ல பொண்ணு. எப்பவும் அவங்ககிட்ட `நீ ரொம்ப திறமைசாலிம்மா.. நல்ல கதையா தேர்ந்தெடுத்து நடிங்க’னு சொல்லுவேன்.

எதார்த்தமா ரொம்ப அருமையா நடிப்பாங்க. செட்ல நாங்க பெருசா பேசிக்கிட்டதெல்லாம் இல்ல. ஆனாலும் எனக்கு அந்தப் பொண்ணை ரொம்பப் பிடிக்கும்” என்றவர் தொடர்ந்து பேசினார்.

கவிதாலயா கிருஷ்ணன்
கவிதாலயா கிருஷ்ணன்

“நானும் மோகன் ராமனும் நிஜத்திலும் நல்ல நண்பர்கள். அவன் கூட நடிக்கும்போது மட்டும்தான் கேஷூவலாகப் பேசுவேன். மத்த சீன்ல எல்லாம் இப்படித்தான் என் கேரக்டர் இருக்கணும்னு நானே டிசைன் பண்ணிக்கிட்டேன்.

செட்ல எல்லாரும் என்னைப் பார்த்து பயப்படுவாங்க. என்கிட்ட பேசுனா தானே நான் பேச முடியும். அவங்களும் பேச மாட்டாங்க. நானும் பேச மாட்டேன்” எனச் சிரித்தவரிடம் கடைசி எபிசோட் குறித்துக் கேட்டோம்.

“`உங்க மனைவி இறந்துடுவாங்க நீங்க எமோஷனலி உடைஞ்சிடுவீங்க’ன்னு தீபக் என்கிட்ட முன்னாடியே சொன்னார். அதனால நான் அதுக்குத் தயாரா இருந்தேன். டைரக்டர் அந்தச் சீனை ரொம்ப அழகா எடுத்திருந்தார். ரொம்ப பிரேக் டவுன் ஆகாதீங்க சார்னு சொல்லிட்டே தான் இருந்தார்.

ஏன்னா நான் சிவாஜி கணேசனோட தீவிர ரசிகன். ஓவரா பண்ணாதீங்க கொஞ்சம் கம்மியா பண்ணுங்கன்னு சொல்லிட்டே இருந்தார். சிவாஜி சாரோட `நெஞ்சிருக்கும் வரை’ பார்த்தேன். அவர் எப்படி பண்ணியிருப்பார்னு நினைச்சுப்பேன். இந்தச் சீரிஸ்ல என் மனைவி பெயர் சாரதா. ரியல் லைஃப்ல என் மனைவி பேரும் சாரதா. அந்த டிராமா இருந்தது.

கவிதாலயா கிருஷ்ணன் - தீபா பாலு
கவிதாலயா கிருஷ்ணன் – தீபா பாலு

சின்ன எமோஷன் தேவைப்படுது சீரிஸ்ல. என் மனைவியா நடிச்சவங்களும் நல்லா நடிச்சிருந்தாங்க. திடீர்னுதான் அவங்க இறந்துடுவாங்கன்னு சொன்னாங்க. ஆனா, அவங்க ரொம்ப ஸ்போர்ட்டிவ் ஆக எடுத்துக்கிட்டாங்க. என்னை அப்படி நடிக்கணும்னு சொல்லியிருந்தா நான் நடிச்சிருக்க மாட்டேன்.

ஆனா, அவங்க கேஷுவலா எடுத்துட்டு பண்ணாங்க. கிளிசரின் எல்லாம் போட்டு எனக்கு நடிக்கத் தெரியாது. ரியலா அழுததுதான் அதெல்லாம்… ரீனாவா நடிச்சிருந்த தீபா அந்த சீன்ல ரொம்ப நல்லா ரியாக்ட் பண்ணியிருப்பாங்க. எப்பவுமே ஒருத்தங்க ரியாக்ட் பண்ணா தான் நாம ஆக்ட் பண்ண முடியும். தீபா பாலு, அனுமோல் கூட நடிக்கும்போது பயமா இருக்கும். அவங்க கேஷுவலா நடிச்சிட்டு போயிடுவாங்க” என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து கவிதாலயா கிருஷ்ணன் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்! 

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest