modi-putinjpg1754660885492

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்வதால் கூடுதல் வரிவிதித்துள்ளார். இது இரண்டு நாடுகளுக்கும் இடையில் உரசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் உடனான போருக்கு எரிபொருள் ஊற்றுவதாக அமெரிக்கா விமர்சித்திருந்தது. மேலும், நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் ரஷ்ய அதிபர் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (இன்று) பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என ட்ரம்ப் கூறியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மோடி, புதின்

ரஷ்யா உடன் வர்த்தகம்: நெருக்கும் ட்ரம்ப் – முக்கியத்துவம் பெறும் புதினின் இந்திய வருகை!

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவிற்கு வருகை தருவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியிருக்கிறார். ஆனால், புதினின் வருகை குறித்து ரஷ்யா தரப்பில் எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் தொலைபேசி மூலம் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசியிருக்கும் பிரதமர் மோடி, “எனது நண்பர் அதிபர் புதினுடன் மிகவும் விரிவான உரையாடலை நடத்தினேன். உக்ரைன் விவகாரம் தொடர்பாக பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

எங்கள் இருதரப்பு உரையாடல் மூலம் பல முக்கிய விஷயங்களை மதிப்பாய்வு செய்தோம். இந்தியா-ரஷ்யா கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அதிபர் புதினை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest