aircraft_jet_landing_cloud_46148

இத்தாலியில், விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவமானது மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் நடந்திருக்கிறது.

இது குறித்து அந்நாட்டு ஊடகங்களில் வெளியான தகவலின்படி, வோலோடியா விமான நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ319 என்ற விமானம் ஸ்பெயினின் அஸ்டூரியாஸுக்கு செல்ல விமான ஓடுதளத்தில் புறப்படத் தயாராக இருந்தபோது அதனருகே ஓடிக்கொண்டிருந்த நபர் விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.

விமானம்
விமானம்

இந்த சம்பவத்துக்குப் பின்னர், சம்பந்தப்பட்ட வோலோடியா விமான நிறுவனம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், உயிரிழந்தது பயணியோ விமான ஊழியரோ அல்ல என்றும், 154 பயணிகளும் 6 பணியாளர்களும் விமானத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும் ட்வீட் செய்தது.

இந்த சம்பவத்தால், அந்த விமான நிலையத்தில் 9 விமானங்கள் திருப்பி விடப்பட்டு, ஆறு விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எட்டு விமானங்கள் நிறுத்தப்பட்டது.

காலை 10:20 முதல் அங்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, மதியத்துக்கு மேல் விமானங்கள் இயக்கப்பட்டன.

மறுபக்கம், இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது என விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest