152320018

குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

உடல்நலக் காரணங்களைக் கருத்தில் கொண்டு மருத்துவ ஆலோசனைக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Jagdeep Dhankar
Jagdeep Dhankar

74 வயதான ஜெகதீப் தன்கர் கடந்த 2022-ம் ஆண்டு குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியேற்றார்.

மாநிலங்களவையின் தலைவரான இவர் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.

ராஜினாமா குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “உடல்நலத்தை முன்னுரிமைப்படுத்தவும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 67(அ) இன் படி, நான் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன்.

மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கும், எனது பதவிக்காலத்தில் நாங்கள் பேணிய இனிமையான பணி உறவிற்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெகதீப் தன்கர்
ஜெகதீப் தன்கர்

மாண்புமிகு பிரதமர் மற்றும் மதிப்புமிக்க அமைச்சரவைக் குழுவிற்கு எனது ஆழ்ந்த நன்றியை வெளிப்படுத்துகிறேன்.

பிரதமரின் ஒத்துழைப்பும் ஆதரவும் மதிப்புமிக்கவையாக இருந்தன, மேலும் இந்தப் பதவியில் இருந்தபோது நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.

மாண்புமிகு பிரதமர் மற்றும் மதிப்புமிக்க அமைச்சரவைக் குழுவிற்கு எனது ஆழ்ந்த நன்றியை வெளிப்படுத்துகிறேன். பிரதமரின் ஒத்துழைப்பும் ஆதரவும் மதிப்புமிக்கவையாக இருந்தன, மேலும் இந்தப் பதவியில் இருந்தபோது நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.

மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமிருந்து பெற்ற அன்பு, நம்பிக்கை, மற்றும் பாசம் எப்போதும் என் நினைவில் நீங்காமல் பதிந்திருக்கும்.

எங்கள் மாபெரும் ஜனநாயகத்தில் துணைக் குடியரசுத் தலைவராகப் பெற்ற மதிப்புமிக்க அனுபவங்களுக்கும் நுண்ணறிவுகளுக்கும் நான் ஆழ்ந்த நன்றியுடையவனாக இருக்கிறேன்.

Jagdeep Dhankar Resignation
Jagdeep Dhankar Resignation

இந்த முக்கியமான காலகட்டத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தையும், முன்னெப்போதும் இல்லாத வியத்தகு வளர்ச்சியையும் கண்டு, அதில் பங்கேற்கும் பாக்கியம் கிடைத்தது ஒரு திருப்தியும் பெருமையுமாகும்.

நம் நாட்டின் வரலாற்றில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் காலத்தில் பணியாற்றியது உண்மையிலேயே ஒரு கௌரவமாகும்.

இந்த மதிப்புமிக்க பதவியை விட்டு வெளியேறும்போது, பாரதத்தின் உலகளாவிய உயர்வு மற்றும் அபரிமிதமான சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன், மேலும் அதன் பிரகாசமான எதிர்காலத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest