
பேத்தியின் உத்வேகத்தால் ஜெய்ப்பூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 71 வயதில் சார்ட்டட் அக்கவுண்ட் படிப்பைப் படித்த சாதித்துள்ளார்.
லிங்க்ட் இன் பதிவின்படி, ஓய்வு பெற்ற வங்கி நிபுணரான தாராசாந்த் அகர்வால் இளமைப் பருவத்திலிருந்து அவருக்குக் கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது.
அவரின் காலங்கள் வங்கி வேலையிலேயே சென்று இருக்கிறது. ஆனால், அவரின் கல்விக் கனவு அப்படியே இருந்திருக்கிறது.

தனது பேத்திக்குச் சவாலாக இருந்த சிஏ பாடத்தை வழிநடத்திச் சென்றபோது அகர்வாலுக்கு இந்தப் பாடத்தின் மீது அதிகமான ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
அவரது ஆர்வம் ஒரு அர்ப்பணிப்பாக மாறி இதற்காகப் பல மாதங்கள், பல மணி நேரம் படித்து உழைத்துள்ளார். இறுதியாக அதற்கான தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை படித்து, எழுத்து பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் அவருக்கு உடல்நலப் பிரச்னைகள் இருந்த போதிலும் அவரது விடாமுயற்சியால் 71 வயதில் தற்போது பட்டயக் கணக்காளர் (CA) ஆகியுள்ளார்.
மே மாதம் சிஏ இறுதிப் போட்டியின் முடிவுகள் வெளியானது, 14,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் CA பட்டத்தைப் பெற்றுள்ளனர்.
ரஞ்சன் கப்ரா , நிஷ்தா போத்ரா மற்றும் மானவ் ராகேஷ் ஷா ஆகியோர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தாலும், இந்தத் தாத்தாவின் கதைதான் நாடு முழுவதும் உள்ள இதயங்களைத் தொட்டுள்ளது.