deepika-in-kalki

கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கல்கி 2898 ஏ.டி. பிரபாஸ் நடித்த இந்த படத்தில், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, அன்னா பென், திஷா படானி, கமல் ஹாசன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

Kalki 2898 AD

இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2026ம் ஆண்டு பிற்பகுதியில் அல்லது 2027ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்தது. வருகின்ற பிப்ரவரி முதல் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

தயாரிப்பு நிறுவனம் சொல்லும் காரணம்

கல்கி படத்தின் கதையே தீபிகாவைச் சுற்று நடக்கும் வகையில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றிருந்தார். இந்த நிலையில், அவர் திடீரென படத்தில் இருந்து நீக்கப்பட்ட செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “Kalki 2898 AD படத்தின் அடுத்த பாகத்தில் தீபிகா படுகோனே நடிக்கமாட்டார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்.

மிகக் கவனமாகப் பரிசீலித்த பிறகு, நாங்கள் பிரிந்துசெல்ல முடிவு செய்துள்ளோம்.

Deepika Padukone
Deepika Padukone

முதல் படத்தை உருவாக்கிய நீண்ட பயணம் இருந்தபோதிலும், எங்களால் ஒரு கூட்டணியாய் இணைய முடியவில்லை.

மேலும், ’Kalki2898AD’ போன்ற ஒரு படம் அர்ப்பணிப்புக்கும் இன்னும் பலவற்றிற்கும் தகுதியானது.

நாங்கள் அவரது எதிர்காலப் பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” எனக் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே பிரபாஸ் படத்திலிருந்து நீக்கம்!

முன்னதாக சந்தீப் ரெட்டி வாங்காவின் படத்திலிருந்து தீபிகா வெளியேறியது சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. அதுவும் பிரபாஸ் நடிக்கவிருந்த ஸ்பிரிட் எனக் கூறப்பட்டது.

அதிலிருந்து தீபிகா விலகியபோது அவர் பெயரைக் குறிப்பிடாமல் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் சந்தீப் ரெட்டி வாங்கா.

இதனால் ஸ்பிரிட் படத்திலிருந்து தீபிகா விலகியதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest