
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’.
இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ போன்ற பாடல்களை இசையமைத்து வைரலான சாய் அபியங்கர் ‘கருப்பு’ படத்திற்கு இசையமைக்கிறார்.

ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் நேற்று (ஜூலை 23) ‘கருப்பு’ படத்தின் டீசரை வெளியிட்டிருந்தனர்.
இந்த டீசர் மக்களிடையே வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில் நேற்று திரையரங்கில் டீசரை வெளியிட்ட பிறகு பேசிய ஆர்.ஜே பாலாஜி, “ எங்களால் முடிந்தவரை ‘கருப்பு’ படத்தை சுட சுட தீபாவளிக்குக் கொடுக்க ட்ரை பண்றோம்.

கடந்த ஒரு வருடமாக என்னுடைய மொத்த டீமும் இந்தப் படத்திற்காகதான் வேலை செய்துகொண்டிருக்கிறோம். ரொம்ப சந்தோஷமாக சாய் அபயங்கரின் வேலையை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். இந்தப் படத்தை 5 ரைடர்ஸ் எழுதி இருக்கிறோம். சந்தோஷமாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…