GtAZz6DXYAAqTMe

உலகில் பல்வேறு வகையான பொம்மைகள் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றது. அந்த வகையில் லாபுபு என்று அழைக்கப்படும் அரிய வகை பொம்மை 9.15 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கையின் அறிக்கைப்படி, 2023 ஆண்டு பாப் மார்ட் நிறுவனத்தின் ஒரு தொகுதியாக இருக்கும் ப்ளைண்ட் பாக்ஸ் மற்றும் வான்ஸ் காலனி பிராண்டுடன் இணைந்து இந்த பொம்மையை வெளியிடப்பட்டது.

Labubu

இந்த பொம்மை வெளியிடப்பட்டபோதே 7400 ($85) ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இந்த பொம்மை இணையத்தில் வேகமாக பிரபலமானதால் அதற்கான டிமாண்ட் அதிகரித்தது.

தற்போது இந்த பொம்மை 9.15 லட்சம் ரூபாய் வரை வாங்கப்பட்டுள்ளது. அதன் உண்மையான விலையை விட 125 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. பாப் மார்ட் நிறுவனம் லாபுபு பொம்மைகளை 1,744 ரூபாய் ($20) முதல் 3,488 ரூபாய் ($40) வரையிலான விலையில் ப்ளைண்ட் பாக்ஸ் முறையில் விற்பனை செய்கிறது.

லாபுபு பொம்மைகள், ஹாங்காங்கைச் சேர்ந்த கலைஞர் காசிங் லங் உருவாக்கிய “தி மான்ஸ்டர்ஸ்” என்ற புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது.

கே-பாப் இசைக் குழு இந்த பொம்மையுடன் தோன்றியபோது இது பெரும் பிரபலமடைந்தது. இதைத் தொடர்ந்து, கிம் கர்தாஷியன், ரிஹானா, டுவா லிபா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த பொம்மையை பெருமையோடு வெளிப்படுத்தினர்.

இதன் மூலம் அந்த பொம்மை புகழ் உச்சத்தை எட்டியது. இதனாலே இதற்கான விலையில் அதிகமாக உள்ளது. இந்த பொம்மைகள் “பேய் ஆற்றலை” கொண்டவை என்ற கோட்பாடுகளும் அங்கு நிலவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Labubu

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest