LIC

திரு. கோ.முரளிதர் அவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியிலுள்ள 261 கிளைகளைக் கொண்ட எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக 01.08.2025 அன்று பொறுப்பேற்றுள்ளார்.

எல்.ஐ.சி.யில் 35 வருடத்திற்கும் மேலாக பணிபுரிந்து வரும் திரு. கோ.முரளிதர் அவர்கள், 1990-ல் உதவி நிர்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார்.

திரு. கோ.முரளிதர்
திரு. கோ.முரளிதர்

தென்மண்டல மேலாளராக ராசு பொறுப்பேற்பதற்கு முன்பு மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்திய அலுவலகத்தில் டிஜிட்டல் மார்க்கெடிங் துறையின் செயல் இயக்குனராக பணிபுரிந்தார்.

திரு. கோ.முரளிதர் அவர்கள் பிராந்திய மேலாளராக மார்க்கெடிங், தொழிலாளா நலன் மற்றும் நிறுவனத்தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் எல்.ஐ.சி.யின் ஹைதராபாத்திலுள்ள தென் மத்திய மண்டலத்தில் பணிபுரிந்துள்ளார்.

மேலும் இவர் ராஜமுந்திரி மற்றும் விசாகபட்டினம் முதலிய எல்.ஐ.சி. கோட்டங்களின் முதுநிலைக் கோட்ட மேலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest