
கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் நடிப்பில் திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்றிருக்கிறது ‘லோகா’ திரைப்படம்.
இந்த மலையாள சினிமாவை இயக்குநர் டாமின் அருண் இயக்க, நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருக்கிறார். 100 கோடி வசூலை அள்ளிய முதல் ஃபீமேல் சென்ட்ரிக் சூப்பர் ஹீரோ திரைப்படம் என்கிற பெருமையும் இந்தப் படத்திற்கு கிடைத்திருந்தது. தற்போது 13 நாள்களில் 200 கோடியைக் கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இந்த வெற்றிக்காக படக்குழுவினருக்கும், நடிகை கல்யாணிக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்த வண்ணமிருக்கின்றன.
இந்நிலையில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன், 200 கோடி வசூல் குறித்து தனது அப்பா அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜைப் பகிர்ந்திருக்கிறார்.
அதில், “வெற்றி தலைக்கு ஏறிவிடக்கூடாது, தோல்வி மனதில் ஏற்றிக் கொள்ளக் கூடாது; நான் உனக்கு சொல்லிய அறிவுரைகள இதுதான் சிறந்தது ஒன்று.

Lokah Chapter 1: Chandra Review: ஒரு டஜன் கேமியோ! மல்லுவுட்டின் புது சூப்பர்ஹீரோ யுனிவர்ஸ் எப்படி?
இதை என்னைக்கும் மறக்காமல் மனதில் பதிச்சு வைச்சுக்கோ. நான் அனுப்பிய இந்த மெசேஜை அழிக்காமல் வச்சுக்கோ” என்று மெசேஜ் அனுப்பியிருக்கிறார் நடிகை கல்யாணியின் தந்தையும், பிரபல இயக்குநருமான ப்ரியதர்ஷன். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…