
`லியோ’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் ‘கூலி’.
இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அந்த நேர்காணலில் அமீர்கானுடன் லோகேஷ் கனகராஜ் படம் பண்ணுவது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், ” ‘கூலி’ படத்தைத் தொடர்ந்து ‘கைதி -2’ படத்தை இயக்குகிறேன். அதன்பின், ‘விக்ரம் – 2’, ‘ரோலக்ஸ்’ என அடுத்தடுத்து வரிசையாக படங்கள் இருக்கிறது. அதெல்லாம் அவர்களுடைய நேரத்தைப் பொறுத்தும் என்னுடைய நேரத்தைப் பொறுத்தும் எடுக்கப்படும்.

நிச்சயம் அமீர்கானுடன் இணைந்து படம் பண்ணுவேன். அப்படம் இந்திய சினிமா என்கிற எல்லைத் தாண்டி உலகத்தரமான திரைப்படமாக இருக்கும். ‘கூலி’ திரைப்படத்தில் நடிகர் அமீர் கானின் காட்சி குறைவாக இருந்தாலும் வலுவாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…