9315315817354556032629167688696233908502528n

நடிகை மீனா எவர்கிரீன் நாயகியாக தொடர்ந்து கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என தூள் கிளப்பி வருகிறார்.

சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபு பேட்டியெடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

ஜெகபதி பாபுவுடன் சில திரைப்படங்களில் நடிகை மீனாவும் இணைந்து நடித்திருக்கிறார்.

நடிகை மீனா
நடிகை மீனா

இந்தப் படங்கள் கொடுத்த பரஸ்பர புரிதலை தொடர்ந்து வெளிப்படையாக தனது பர்சனல் மற்றும் சினிமா கரியர் தொடர்பாகப் இந்தப் பேட்டியில் பேசியிருக்கிறார் மீனா.

அப்படி இதில் மறைந்த நடிகை சௌந்தர்யாவுடனான நட்பு குறித்தும், செளந்தர்யாவுக்கு விபத்து நிகழ்ந்த தினத்தன்று அவருடன் மீனாவும் பிரச்சாரத்தில் பங்கேற்கவிருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

நடிகை மீனா, “எங்களுக்கிடையேயான போட்டி மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. சௌந்தர்யா ஒரு அற்புதமான நபர்.

அவர் என் நெருங்கிய நண்பர். ஆனால், அவரது மரணச் செய்தியைக் கேட்டபோது, நான் அதிர்ந்துபோனேன்.

அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியவில்லை. உண்மையில், அன்று நான் சௌந்தர்யாவுடன் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

 நடிகை மீனா
நடிகை மீனா

என்னையும் அந்தப் பிரச்சாரத்திற்கு அழைத்திருந்தார்கள். ஆனால், எனக்கு அரசியல் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் பிடிக்காது.

நான் படப்பிடிப்பில் இருப்பதாகச் சொல்லி அதைத் தவிர்த்தேன். ஆனால், அந்த சம்பவம் நடந்ததை அறிந்தபோது, மனமுடைந்து போனேன்.” என்று சொன்னார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest