Screenshot-2025-09-20-at-2.21.51-PM

குஜராத்தின் பாவ் நகரில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்தியாவின் வளர்ச்சிக் குறித்துப் பேசிய மோடி, இந்தியாவின் எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருத்தல்தான் என்று பேசியிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் மோடி, “இன்று இந்தியா விஸ்வபந்து’ உணர்வோடு முன்னேறி வருகிறது. உலகத்தில் நமக்கு பெரிய எதிரி யாரும் இல்லை. நம்முடைய மிகப் பெரிய எதிரி, மற்ற நாடுகளைச் சார்ந்திருத்தல். இதுவே நம் மிகப் பெரிய எதிரி, இந்த எதிரியை நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து தோற்கடிக்க வேண்டும்.

பிரதமர் மோடி PM Modi

பிற நாட்டைச் சார்ந்து இருக்கும் இந்த சார்புநிலை என்ற எதிரியை நாம் எப்போதும் கனவாமாக கையாள வேண்டும். வெளிநாட்டுச் சார்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நாட்டின் தோல்வி இருக்கும்.

உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நம் நாடு ‘ஆத்மநிர்பர்’ ஆக மாற வேண்டும். நாம் மற்றவர்களைச் சார்ந்து இருந்தால், நமது சுயமரியாதை பாதிக்கப்படும். 140 கோடி நாட்டு மக்களின் எதிர்காலத்தை நாம் மற்றவர்களின் கைகளில் விட்டுவிட முடியாது. எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை நாம் பணயம் வைக்க முடியாது. நம் நாட்டின் பிரச்னைகளுக்கு ஒரே ஒரு மருந்துதான், அது தற்சார்பு இந்தியாதான்.” என்று பேசியிருக்கிறார்.

India’s enemy is dependence on other countries.

ஜிஎஸ்டி குறைப்பு – நாட்டின் வளர்ச்சி

மேலும், “இந்த ஆண்டு, ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக சந்தைகள் அதிக வளர்ச்சியை சந்திக்கும். எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்த வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest