கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது சுதந்திர தின விழா உரையில் இந்திய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதாக அறிவித்தார்.

2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது, 5%, 12%, 18%, 28% என நான்கு வரி ஸ்லாப்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது இந்த ஸ்லாப்கள் 5% மற்றும் 18% என இரண்டு ஸ்லாப்களாக மட்டும் குறைக்கப்பட்டுள்ளன.

54-ம் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்

GST 2.0: செப்டம்பர் 22 முதல் எந்தெந்தப் பொருள்களுக்கு வரி குறைகிறது? முழுப் பட்டியல்!

இதன்படி மருத்துவம் சார்ந்த பொருட்கள், விவசாயம் சார்ந்த பொருட்கள், உணவுப்பொருள்கள், கல்வி சம்பந்தப்பட்ட பொருள்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகித வரியாகவும், 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகித வரியாகவும், 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகித வரியாகவும் பொருள்கள் குறைப்படும் என கூறப்பட்டிருக்கின்றன.

இந்த புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் செப்டம்பர் 22ஆம் தேதியான நாளை முதல் அமலுக்கு வரவிருக்கிறது. இதற்கிடையில் அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதமர் மோடி, PM Modi
பிரதமர் மோடி

GST 2.0 குறையும் மாருதி கார்களின் விலை: Swift, Celerio, Baleno விலை என்ன?

இந்தச் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் காணொளி மூலம் உரையாடுகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

  • நவம்பர் 8ம் தேதி 2016ம் ஆண்டு திடீரென 500, 100 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பை அறிவிக்கும்போது திடீரென பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் காணொளி மூலம் உரையாடி திடீர் அறிவிப்பைக் கொடுத்தார்.

  • மார்ச் 12, 2019 அன்று, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாலகோட் வான்வழித் தாக்குதல்கள் தொடங்கப்பட்டதாக காணொளி மூலம் அறிவித்தார்.

  • மார்ச் 24, 2020 அன்று, கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அறிவித்தார்.

  • மே 12, 2025 அன்று, ஆபரேஷன் சிந்தூர் பற்றி காணொளியில் உரையாற்றியிருந்தார்.

தற்போது இன்று மாலை 5 மணிக்கு காணொளி மூலம் உரையாடவிருக்கிறார் பிரதமர் மோடி.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest