sublakshini-dp

’கோல்டன் ஸ்பாரோ…’… ‘கிஸ்ஸுக்…’… ‘பொட்டல மிட்டயே…’… ‘மோனிகா…’ என செம்ம ஸ்டைலிஷ் குதூகலப் பாடல்களைப் பாடி ரசிகர்களை வைப்லேயே வைத்திருப்பதன் மூலம் முன்னணி இசையமைப்பாளர்களின் மோஸ்ட் வாண்டட் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார் பாடகி சுப்லாஷினி.

சமீபத்தில், இவர் பாடிய ‘பொட்டல மிட்டாயே’…, ‘கூலி’ படத்தின் ’’மோனிகா’… பாடல்கள் ட்ரெண்டிங்கில் நம்பர்- 1 ஆகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது. பாடுவதிலேயே இவ்வளவு வைப் என்றால், அவரது ஆட்டத்தைப் பற்றி சொல்லவா வேண்டும்? பாடல் புரொமோ வீடியோவிலும் ஆட்டம் பாட்டம்… பாராட்டு கொண்டாட்டம் என உற்சாக மோடில் இருக்கிறார். வாழ்த்துகள் சொல்லி சுப்லாஷினியிடம் பேசினேன்.

”‘பொட்டல மிட்டாய்…’ பாட்டு பாராட்டுக்களை குவிச்சிட்டிருக்கே… சந்தோஷ் நாராயணன் கூட ஒர்க் பண்ணின எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்தது?”

“பொட்டல மிட்டாயே இந்தளவுக்கு வைரல் ஆகும்னு எதிர்பார்க்கல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. சந்தோஷ் நாராயணன் சாரை, இதுக்கு முன்னாடி ரெண்டு மூணு கான்செர்ட்ல பார்த்திருக்கேன். என் பாடல்களையும் சார் கேட்டிருக்கார். அதன்மூலமாதான், ’பொட்டல மிட்டாயே’ வாய்ப்புக் கொடுத்தார். நான், இதுக்கு முன்னாடி பாடின பாடல்கள் எல்லாம் ரொம்ப ஸ்டைலிஷ்ஷா இருக்கும்.

‘பொட்டல மிட்டாயே’ நாட்டுப்புற பாடல் ஸ்டைலில் சென்னை சுப்லாஷினியாய் பாடாம வெளியூர் சுப்லாஷினியாய் பாடுங்கன்னு சந்தோஷ் நாராயணன் சார் சொல்லிட்டார். ரெக்கார்டிங் தியேட்டர்ல பாடும்போதே மொத்த டீமுக்கும் இந்தப் பாட்டு ரொம்ப புடிச்சுப்போச்சு. பாடல் ஷூட் பண்ணும்போது நான் பாப் கட்டிங்குல போயிருந்தேன். பாபா பாஸ்கர் மாஸ்டர் என்னைப் பார்த்து “என்ன சுப்லாஷினி, ’கோல்டன் ஸ்பாரோ’ பாட்டு ஷூட்டிங்ல முடி நீளமா இருந்தது. இந்த பாட்டுக்கு கொண்டை போடலாம்னு பார்த்தா பாப் கட்டிங்குல வந்திருக்கீங்களே?” அப்படின்னு கேட்டார். அப்புறம், அவரே எனக்கு கொண்டை போட்டுவிட்டு, பூ பொட்டெல்லாம் வெச்சு இந்த பாட்டுக்கு ஏற்றமாதிரி கெட்டப்பை கொண்டுவந்தார்.

”புடவை கட்டி ஆடியிருக்கீங்களே அது யாரோட ஐடியா?“

“நித்யா மேனன் மேடம் ‘பொட்டல மிட்டாயே…’ பாட்டுக்கு புடவை கட்டிக்கிட்டுத்தான் ஆடியிருக்காங்க. அதனால, புடவைதான் காஸ்ட்யூம்னு சொன்னாங்க. எங்கம்மா புடவையைத்தான் கட்டிக்கிட்டு வந்து டான்ஸ் பண்ணினேன். எங்கம்மா, நித்யா மேனன் மேடம் கட்டியிருக்கிற புடவையை பார்த்தாங்க. அதேமாதிரி, அவங்களோட புடவை ஒன்னு கொடுத்தாங்க. நான், அதிகமா எங்க வீட்டு ஃபங்ஷனுக்கெல்லாம் புடவை கட்டி பெரிய பொட்டுத்தான் வெச்சிட்டுப் போவேன். அதனால, புடவை கட்டுறது எனக்கு புதுசு கிடையாது. மற்றபடி, ‘பொட்டல மிட்டாயே’ பாட்டை நிஜமான தாபாவுல ஷூட் பண்ணினோம்.

பாண்டிராஜ் சாரும் விவேக் சாரும் ’ரொம்ப சூப்பாரா பாடியிருக்கீங்க’ன்னு பாராட்டினாங்க. ரெண்டு நாளுக்கு முன்னாடி சந்தோஷ் நாராயணன் சார் போன் பண்ணி, ’பாட்டு ட்ரெண்டிங்லயே போய்க்கிட்டிருக்கு. சூப்பரா பாடியிருக்கீங்க’ன்னு பாராட்டினார். எனக்கு ரொம்ப ஹேப்பி. என்னை அவங்க மனைவி, மீனாட்சி மேடம்கிட்டே இவங்கதான் சுப்லாஷினின்னு சொல்லி பெருமைப்படுத்தி பேசினார். ரொம்ப ஃப்ரெண்ட்லியா பேசுவார். இந்த பாட்டுக்கு வெற்றி அடைஞ்சதுக்கு சந்தோஷ் நாராயணன் சாருக்குதான் கிரெடிட் போய் சேரணும். அவருக்கு என்னோட நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்.”

”இசைத்துறையில எப்படி ஆர்வம் வந்தது? உங்கள் குடும்பம் பற்றி?”

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். எங்க வீட்டுல யாருமே இசைத்துறை கிடையாது. அப்பா பேங்க் ரிட்டயர்டு ஆஃபிஸர், அம்மா ஹவுஸ் வைஃப், ஒரு அண்ணன். நானும் அண்ணாவும் ரொம்ப நல்லா படிப்போம். அம்மா அப்பாவுக்கு எந்த கஷ்டமும் கொடுத்ததில்ல. எங்கப்பா அம்மா ரொம்ப ப்ராக்டிகலான டைப். எனக்கா ஆர்வம் வந்துதான் இசைத்துறைக்கு வந்தேன். எல்லாரும் முறைப்படி சங்கீதம் எல்லாம் கற்றுக்குவாங்க. நான், இப்போ ஒரு மாசமாத்தான் மியூசிக் க்ளாஸே போக ஆரம்பிச்சிருக்கேன். ஸ்கூல் காலேஜ் படிக்கும்போதெல்லாம் போட்டிகளில் கலந்துக்குவேன். அப்போ, பாட்டு டீச்சர்ங்கதான் காரெக்‌ஷன் சொல்லுவாங்க. அப்படியே பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

s

2017-ல் தான் பாடல்கள் பாடி இன்ஸ்ட்டாவுல போஸ்ட் போட ஆரம்பிச்சேன். 2018-லதான் கிட்டார் வாங்கினேன். நானே, பாட்டெல்லாம் எழுதி போஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன். 2021-ல ‘காத்தாடி…’ பாட்டு வாய்ப்பு வந்தது. 2023-லதான் அது பெருசா ட்ரெண்டிங் ஆனது. அந்த பாட்டு ட்ரெண்டிங் ஆனதால ஜி.வி பிரகாஷ் சார் ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் சான்ஸ் கொடுத்தார். அவர், படத்துல இப்போ நான் ரெண்டு பாடல்கள் பாடிட்டேன். ஜிவி சார் ரொம்ப ஹார்டு ஒர்க்கர். அதனாலதான் அவரால இந்த உயரத்துல இருக்கமுடியாது. அதேமாதிரி, தனுஷ் சார் நாம எல்லாம் ஒரு வேலையத்தான் செய்யுறோம். ஆனா, அவர் பத்து வேலைகளை செஞ்சுக்கிட்டிருப்பார். அந்தளவுக்கு மல்ட்டி டேலண்ட்”

”இசைத்துறையில உங்களுக்கு கிடைத்த பெரிய பாராட்டுன்னா யாருடையது?”

“நான் மாஸ்டர் டிகிரி எல்லாம் முடிச்சுட்டு, ஹெச்.ஆர் வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். சின்ன வயசுல நான் பாடகியா ஆவேன்னுல்லாம் எனக்கு தெரியாது. மியூசிக் ஃபீல்டுல போகலாம்னு இருந்தப்போ இருக்கிற புரஃபஷனலை விட்டுட்டு, சினி ஃபீல்ட்டுக்குள்ளா போகும்போது சான்ஸ் கிடைக்குமான்னு எங்கப்பா அம்மாவுக்கு ஒரு கேள்வி இருந்துச்சு. ஆனா, ‘காத்தாடி…’ பாட்டு ரிலீஸ் ஆனப்போ விஜய் ஆண்டனி சார் போன் பண்ணி ‘என்ன வாய்ஸ் உங்களுக்கு? சூப்பரா பாடுறீங்க’ன்னு எனக்கு நேரம் ஒதுக்கி ரொம்ப என்கரேஜ் பண்ணி பாராட்டினார். பிரமிக்கவைக்கிற ஒரு மியூசிக் டைரக்டர் போன் பண்ணி பாராட்டினதும் என்கரேஜ் பண்ணினதும்தான் ஹெச்.ஆர் வேலையை விட்டுட்டு, இந்த சினிமா துறைக்குள்ளேயே முழுநேரமா என்ட்ரி ஆகுறதுக்கு காரணமா அமைஞ்சது. தேங்க்ஸ் விஜய் ஆண்டனி சார்!

சுப்லாஷினி

இப்போ, முழுநேர பாடகியா ஆனதால, இன்னைக்கு நான் படிச்ச எத்திராஜ் காலேஜுக்கே சீஃப் கெஸ்ட்டா போறேங்கிறது சந்தோஷமான இருக்கு. குழுவா பாடிட்டிருக்கும்போது ஒரு காலத்துல எத்திராஜ் காலேஜ் ஸ்டேஜுல சோலோவா பாடமாட்டோமான்னெல்லாம் ஏங்கியிருக்கேன். இப்போ, மாணவிகள் முன்னாடி அவங்களுக்கும் தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு. நிறைய பேர் சொல்றதைக் கேட்கும்போது நான், சரியான பாதையில்தான் பயணிச்சிட்டிருக்கேங்கிற நம்பிக்கை பிறந்திருக்கு.”

”சுப்லாஷினிக்கு பிடித்த பாடகிகள்?

“சக்திஸ்ரீ கோபாலன், சின்மயி மேடம் குரல் ரொம்பப் பிடிக்கும். சக்தஸ்ரீ கோபாலன் குரலில் ’கள்ள களவாணி’, ’காதல் அர ஒண்ணு’… பாடல்கள் பிடிக்கும். சின்மயி மேடத்தோட ‘தேரே பீனா…’ ‘வாராயோ வாரோயோ’, ‘நான் உன் அழகினிலே…’ பாட்டெல்லாம் ரொம்ப பிடிக்கும். இப்படி பெரிய பட்டியலே இருக்கு!”

”புஷ்பா-2 வுல நீங்க பாடின ‘கிஸ்ஸுக் கிஸ்ஸுக்’ பான் இந்தியா லெவலில் ஹிட்.. எப்படி வந்தது அந்த வாய்ப்பு?”

“தேவிஸ்ரீ பிரசாத் சார், புதுசா குரல் வேணும்னு தேடியிருக்கார். அப்போதான், எனக்கு அந்த வாய்ப்பு வந்தது. எனக்கு தமிழ், இந்தி தெரியும். அதனால, பாடிட்டேன். ஆனா, தெலுங்கு, கன்னடத்துல பாடுறது கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. ஆனா, எல்லாருமே தெலுங்கு பொண்ணு மாதிரியே பாடுனீங்கன்னு பாராட்டினாங்க. தேவட்ஸ்ரீ பிரசாத் சார் எப்போதுமே செம்ம எனர்ஜியா இருப்பார்.

சுப்லாஷினி

ஒரு இடத்துல உட்கார மாட்டார். ஸ்டூடியோவுல நடந்துட்டு.. ஓடிக்கிட்டுன்னு ரொம்ப எனர்ஜியா இருப்பார். என்னை அழகா வெல்கம் பண்ணினார். எனக்கு இளையராஜா சார், ரஹ்மான் சார், யுவன் சார் மியூசிக்குல பாடணும்னு ஆசை. தமிழ், தெலுங்குல பாடல்கள் பாடியிருக்கேன். அடுத்தடுத்து ரிலீஸ் ஆகப்போகுது. டப்பிங்கும் முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest