
ஏஐ தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதன் ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாகி நொடிபொழுதில் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
தற்போது, ‘நானோ பனானா’ என்று அழைக்கப்படும் 3D டிஜிட்டல் புகைப்படங்களின் புதிய போக்கு உலகளவில் சமூக ஊடகங்களை கலக்கி வருகிறது. கூகுளின் ஜெமினி 2.5 ஃப்ளாஷ் இமேஜ் டூல் இதன் மையமாக உள்ளது. இந்த AI டூல் மூலம் புகைப்படங்களை சில வினாடிகளில் 3D மாதிரியாக மாற்ற முடிகிறது.
இந்த டூல் இலவசமாக அணுக முடியும் என்பதால் பயனர்கள், அதனை பயன்படுத்தி சமூக ஊடகங்களை ஆக்கிரிமித்து வருகின்றனர். முகபாவங்கள், உடைகள், பின்னணி விவரங்கள் என அனைத்தையும் அப்படியே பிரதிபலிக்கிறது.

உருவாக்குவது எப்படி?
“Try Nano Banana” அல்லது Gemini 2.5 Flash Image என்ற விருப்பத்தைக் கூகுள் AI Studio-விலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். பயனர்கள் தங்கள் புகைப்படத்தை AI-க்கு கொடுத்தால், அது அவர்களின் உருவத்தை சிறிய பிளாஸ்டிக் பொம்மை போல, கலெக்டபிள் ஃபிக்யர் (collectible figurine) வடிவில் உருவாக்கி தருகிறது. இதனை பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!