The-Return-Of-Padayappa-75th-Birthday-Special-Thalaivar-Superstar-Rajinikanth-Padayappa-14-7-screenshot

ரஜினியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘படையப்பா’ படம் ரீ-ரிலீஸ் ஆகவிருக்கிறது.

1999-ல் வெளியான இப்படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

படம் ரீ-ரிலீஸ் ஆவதை ஒட்டி திரைப்படம் குறித்தான பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை காணொளி வாயிலாகப் பேசி நம்மிடையே பகிர்ந்திருக்கிறார் ரஜினி.

Padaiyappa
Padaiyappa

‘படையப்பா’ படத்தின் நினைவுகளைப் பகிர்ந்த ரஜினி, “எனக்கு கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ ரொம்பவே பிடிக்கும். அதில் வரும் நந்தினி கதாபாத்திரத்தை வைத்து முழுமையாக ஒரு படம் செய்ய நினைத்தேன்.

இப்படத்திற்கு என்னுடைய நண்பர்கள் பெயரைப் போட்டு தயாரித்ததும் நான்தான். இப்படத்தின் மூலக்கதையும் என்னுடையதுதான். ‘படையப்பா’ என்கிற தலைப்பை சொன்னதும் நான்தான். இந்த தலைப்பு புதியதாக இருக்கிறது என்றும், இந்தப் பெயரை வைத்து சிலர் கேலி செய்வார்கள் என ரவிக்குமார் கூறினார்.

அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம் என நான் அவரிடம் கூறி, அதே தலைப்பையே உறுதி செய்துவிட்டோம். நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் ஐஸ்வர்யா ராய் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணினோம்.

ஆனால், அவர் பிஸியாக இருந்ததால் அவருடைய கால்ஷீட்டிற்காக 4 மாதங்கள் அலைந்தோம். அவருக்கு கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டால் அவருக்காகக் காத்திருக்கலாம் என முடிவு செய்தோம்.

ஏனெனில், அந்தக் கதாபாத்திரம் ஹிட் அடித்தால்தான் படம் ஹிட்டாகும். ஆனால், அவருக்கு இதில் நடிக்க விருப்பமில்லை. எனவே, நாங்கள் முயற்சியைக் கைவிட்டோம். பிறகு வேறு கதாநாயகிகளைத் தேடத் தொடங்கினோம்.

ரம்யா கிருஷ்ணனை எனக்கு ரவிக்குமார் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால், எனக்கு அவரை நடிக்க வைக்கும் முடிவில் அரை மனதாகவே இருந்தது.” என்றார்.

படையப்பா
படையப்பா

‘படையப்பா 2’ படம் குறித்தான ஐடியாவை அவர் சொல்கையில், “‘2.0’, ‘ஜெயிலர் 2’ என இரண்டாம் பாகப் படங்கள் பண்ணும்போது ஏன் ‘படையப்பா 2’ பண்ணக்கூடாது என யோசித்தோம். ‘அடுத்த ஜென்மத்துலயாவது நான் உன்னைப் பழி வாங்காம விடமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுப் போனாள் நீலாம்பரி.

அதனால், ‘படையப்பா 2’ படத்திற்கு ‘நீலாம்பரி’ தான் டைட்டில். அதற்கான கதை விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. கதை நன்றாக வந்தால் ரசிகர்களுக்கு அது திருவிழாவாக இருக்கும்.” எனக் கூறினார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest