
71-வது தேசிய விருது நேற்று(ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என ‘பார்க்கிங்’ திரைப்படம் 3 விருதுகளை வென்றிருக்கிறது.

இந்நிலையில் பார்க்கிங் படத்தில் ஹீரோவாக நடித்த பார் நெகிழ்ச்சியாகப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். “முழு நேர்மையையும், நம்பிக்கையையும் கொண்டு நாங்கள் பணியாற்றிய ‘பார்க்கிங்’ திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்திருக்கின்றன.
‘சிறந்த திரைக்கதை’ விருதுக்கு எனது இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், ‘சிறந்த துணை நடிகர்’ விருதுக்கு நமது எம்எஸ் பாஸ்கர் சார் அவர்களுக்கும், மற்றும் ‘சிறந்த தமிழ் திரைப்படம்’ விருதுக்கு எங்கள் ‘பார்க்கிங்’ படக் குழுவினருக்கும் வாழ்த்துகள்.
இந்தப் படத்தை நம்பி ஆதரித்த தமிழக மக்களுக்கும், ரசிகர்களுக்கும், என் குழுவினருக்கும், எனது மனமார்ந்த நன்றி மற்றும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்.
Pசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…