
தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கிறது.
சென்னை வானிலை மையத்தின் அறிக்கையின் படி,
இன்று தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தெலுங்கானாவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா, ஆந்திராவில் உள்ள கடல் பகுதி நகரங்கள், ராயலசீமா ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.