ajays-17

கூலி படத்தின் வெளியீடு நெருங்கி வருகிறது. நடைபெற்று வரும் புரொமோஷன் பணிகளே ஊரெங்கும் ரஜினிகாந்த் ஃபீவரைப் பரப்பி வருகின்றன. இதற்கிடையில் ஒரு கேஷுவலான விமான பயணத்தில் வைரலாகியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

ரஜினிகாந்த் தனது மகளுடன் எகானமி வகுப்பில் பயணிக்கும் வீடியோ ஒன்று இன்று (ஆகஸ்ட் 7) வெளியானது.

Rajinikanth Viral Video

அந்த வீடியோவில் , எகானமி வகுப்பில் முதல் இருக்கையில் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் ஒன்றாக அமர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்

பின்னிருக்கையில் இருந்த ரசிகர் ஒருவர், “தலைவா face பாக்கணும்” எனக் கேட்வே எழுந்து அனைவருக்கும் கையசைத்தார். விமானத்தில் இருந்த பலரும் ஆர்ப்பரித்தனர். சிலர் வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளனர்.

பலரும் அவரது முகத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் எழுந்து நிற்பதைக் காண முடிகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

கூலி
கூலி

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இந்த படத்தில், நாகார்ஜுனா அக்கினேனி, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உப்பேந்திரா, சௌபின் சாகிர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.

தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெய்லர் 2 படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்லர் படத்தின் வெற்றிக்குப் பிறகு நெல்சன் திலீப் குமார் மற்றும் ரஜினிகாந்த் இணையும் இந்த படத்துக்கும் பலத்த எதிர்பார்ப்புகள் உள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest