IMG-20250716-WA0008

பா.ம.க. நிறுவனரும், கட்சித் தலைவருமான மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது என்றும், அதனை சேரன் இயக்குகிறார் என்றும் செய்திகள் பரவி வந்தன.

இந்நிலையில், ”இன்று உங்கள் பேராதரவுடன் ஒரு புதிய பயணம் தொடங்குகிறேன்.. உங்கள் அனைவரின் வாழ்த்தும் அன்பும் தேவை.. மற்ற செய்திகள் அனைத்தும் விரைவில் பகிரப்படும். ஒரு முக்கிய திரைப்படம் மக்களுக்காகத் தயாராகிறது. விடியல் ஆரம்பம்.” என்று சோஷியல் மீடியாவில் பூரிப்பாக அறிவித்திருக்கிறார் சேரன்.

சேரன்
சேரன்

சேரனின் ‘ஆட்டோகிராப்’ படம் ரீ-ரிலீஸ் ஆகவிருக்கிறது. 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டதுடன், நவீனத் தொழில்நுட்பத்துடன் வரவிருக்கிறது. இந்நிலையில் அவர் அடுத்து மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குகிறார்.

இது குறித்து கோடம்பாக்கத்தில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி..

”சேரன்தான், மருத்துவர் ராமதாஸின் பயோபிக்கை இயக்க வேண்டும் என விரும்பிய தயாரிப்பாளர் ஒருவர், சேரனிடம் இது குறித்துப் பேச, சேரனுக்கும் மருத்துவரின் மீது அளப்பரிய அன்பும், மரியாதையும் இருந்தன. இப்படி ஒரு சூழலில்தான் இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளைச் சில மாதத்திற்கு முன்னால் தொடங்கினார் சேரன்.

மருத்துவர் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு ஸ்கிர்ப்ட் முற்றுப்பெறும் சமயத்தில்தான் மலையாளத்தில் ‘நரிவேட்டை’ படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு அமைந்தது.

‘நரிவேட்டை’யில்..

“நல்ல சினிமாவை யாரும் ஒதுக்கிட முடியாது. அர்த்தமுள்ள சினிமாவுக்கான ஆசை என்கிட்டே எப்பவும் இருந்து கொண்டு வந்திருக்கு. மக்களின் மாறுகிற மனோபாவங்களையும், அதன் உண்மைகளைப் பற்றியும் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு.

மலையாளத்தில் நிறைய வித்தியாசமாக கதைக்கருவை எடுத்துக்கொண்டு அதைப் பக்கா கமர்ஷியல் வெற்றியாகவும் மாற்றிக் காட்டுகிற துணிச்சல் இருக்கு. இது எல்லாமே நாம் கத்துக்க வேண்டிய பாடம்” என்று பேட்டிகளில் சொல்லியிருந்தார் சேரன்.

இப்போது பயோபிக்கிற்கான ஸ்கிரிப்ட் வேலை முழுமை பெற்றிருப்பதால், சூசகமாக அறிவித்திருக்கிறார் சேரன். மருத்துவரின் பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ தகவல், ராமதாஸின் பிறந்த தினமான ஜூலை 25ம் தேதி வெளியாகிறது” என்கிறார்கள்.

சேரன்

இன்னொரு ஆச்சரிய தகவலாக இந்தப் படம் மூன்று பாகங்களாகக் கொண்டு வரதிட்டமிட்டுளனர். முதல் பாகத்தில் ராமதாஸ் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, மருத்துவம், ஏழை மக்களுக்குச் சேவை செய்யும் விதத்தில், சொந்தமாக க்ளினிக் ஒன்றைத் தொடங்கி, 2 ரூபாய், 3 ரூபாய் என மிகக்குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்தது போன்றவை வரும்.

மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ராமதாஸ், தான் சார்ந்த வன்னியர் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியதுடன், அவர்களின் ஏழ்மை நிலையை அகற்றி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த சமுதாயமாக மாற்ற வேண்டும் என முடிவு எடுத்தது, கட்சி ஆரம்பித்துத் தேர்தலில் நின்றது முதல் வெற்றி வரை முதல் பாகத்தில் இடம்பெறும் என்றும், அடுத்தடுத்த பாகங்களில் மற்ற சுவாரஸ்யங்கள் இடம்பெறும் என்றும் தகவல்கள் வருகின்றன.

ராமதாஸ் ஆக நடிக்கப் போவது யாரென்பதை சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளனர். சில நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்துள்ளனர். மற்றவர்களுக்கான தேர்வுகள் நடந்து வருவதாகவும் சொல்கிறார்கள். படப்பிடிப்பு செப்டம்பரில் இருக்கலாம் என்றும் தகவல்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest