
2025-ம் ஆண்டுக்கான IFFM-ன் (Indian Film Festival of Melbourne) விருது விழா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விருது விழாவில் ‘Leadership in Cinema’ விருதை நடிகர் அரவிந்த் சாமி பெற்றார். விருது பெற்றதைத் தொடர்ந்து தன்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ‘ரோஜா’ திரைப்படம் தொடர்பாகவும் சில விஷயங்களை அரவிந்த் சாமி பகிர்ந்திருக்கிறார்.

அரவிந்த் சாமி பேசுகையில், “ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் நான் இங்கு சொல்கிறேன்.
‘ரோஜா’ திரைப்படம் வெளியானபோது நான் இந்தியாவிலேயே இல்லை. நான் அப்போது வெளிநாட்டில் இருந்தேன்.
எனது முதுகலைப் படிப்பிற்காக அந்த சமயத்தில்தான் நான் வெளிநாட்டிற்குச் சென்றிருந்தேன். ‘ரோஜா’ படத்தை முடித்த பிறகு, நான் படிப்பைத் தொடர வெளிநாட்டிற்குக் கிளம்பிவிட்டேன்.
அதனால், படத்தின் வெற்றியை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இல்லை. ஆனால், ‘ரோஜா’ படத்தின் காட்சிகளைப் பார்க்கும்போது என்னுடைய நினைவுகளை அது தூண்டுகிறது.” என்றவர், “எனக்கு அர்த்தமுள்ளதாகத் தோன்றும் படங்களை மட்டுமே நான் தேர்ந்தெடுக்கிறேன்.

நான் வணிகத்தைச் சார்ந்து முடிவுகளை எடுக்க விரும்பவில்லை. எனவே, யாராவது என்னிடம் ஒரு சவால் விடுத்தால், நான் அதை என் விருப்பப்படி செய்து முடிக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு வர வேண்டும்.
அதுதான் என்னை உத்வேகம் அளித்து வேலை செய்யத் தூண்டுகிறது. ஒரு விஷயம் எளிதாக இருந்தால், நான் அதைச் செய்ய விரும்பமாட்டேன்.” எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…