
‘லியோ’ படத்திற்குப் பிறகு நடன இயக்குநர் சாண்டி தொடர்ந்து அடர்த்தியான வில்லன் கதாபாத்திரங்களில் களமிறங்கி நல்லதொரு நடிப்பையும் கொடுத்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் லோகா’ படத்திலும் கொடூர வில்லனாக தன்னுடைய மல்லுவுட் அறிமுகப் படத்திலேயே மிரட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது இவர் கிஷ்கிந்தபுரி’ என்ற படத்தின் மூலம் டோலிவுட்டிலும் அறிமுகமாகியிருக்கிறார்.

அதிலும் வில்லனாகவே களமிறங்கியிருக்கிறார் சாண்டி. தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவைத் தொடர்ந்து கூடிய விரைவில் கன்னட சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார் சாண்டி.
`ரோஸி’ என்ற படத்தில் கன்னட சினிமாவிற்குள் அறிமுகமாகும் சாண்டி அப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
அந்தக் கதாபாத்திரம் குறித்து சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், “ `ரோஸி’ திரைப்படம் சில பிரச்னைகளில் இருக்கிறது.
அப்படத்தின் டீசரையும் தயார் செய்துவிட்டார்கள். அதில் நான் திருநங்கையாக நடித்திருக்கிறேன். திருநங்கையாக நடிப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

அதுவும் வில்லன் கேரக்டர்தான். அந்தப் படத்தில் வரும் மிக டேஞ்சரான கதாபாத்திரம் அதுதான். அந்தப் படமும் பயங்கரமாக இருக்கும்.
பிரச்னைகள் முடிந்ததும் அந்தப் படம் பற்றிய விஷயங்கள் தெரியவரும்.” எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…