Capture-1

1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சரோஜா தேவி உடல்நலக் குறைவால் நேற்று (ஜூலை 14) காலமானார்.

சினிமா மட்டுமின்றி தன் வாழ்வில் பொதுசேவையும்  செய்து வந்த அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டிருக்கிறது.

இன்று(ஜூலை 15) காலை 11.30 மணிக்கு அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

சரோஜா தேவி
சரோஜா தேவி

இந்நிலையில் நேற்று அவரின் உடலுக்கு நடிகர்களான விஷால், கார்த்தி, அர்ஜுன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.

இந்திய திரையுலகிற்கே பேரிழப்பு

அஞ்சலி செலுத்தியப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “ சரோஜா தேவி அம்மா அவர்களின் இறப்பு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே பேரிழப்புதான்.

அவருடன் அமர்ந்து நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறேன். அவருக்கு இணையாக யாரும் இருக்க முடியாது.

கண்களால் பேசக்கூடிய ஒரு நடிகை.  “சரோஜா தேவி அம்மாவின் கண்கள் பொக்கிஷம். அந்த கண்கள் யாருக்குப் போய் சேரப்போகிறது  என்பதைப் பார்க்க மிகவும்  ஆசையாக இருக்கிறேன். “ என்றிருக்கிறார்.

விஷால்
விஷால்

 ‘என்னப்பா பில்டிங் கட்டி முடிச்சிட்டீங்களா?’

தொடர்ந்து பேசிய கார்த்தி, “   பெரிய ஆளுமை கொண்ட  நபர் அவர்.  50 வருடங்களுக்கு மேல் நடிகையாக  இருந்திருக்கிறது. நடிகர் சங்கத்தில் நாங்கள் இருப்பதால் மாதம் ஒரு முறையாவது ஃ போனில் பேசிவிடுவோம்.

 ‘என்னப்பா பில்டிங் கட்டி முடிச்சிட்டீங்களானு ‘அடிக்கடி கால்  பண்ணி கேட்பார்கள். திறப்பு விழாவுக்கு அவர்  இல்லாமல் போனது ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்கிறது”  என்று   பேசியிருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest