
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில்லாக வென்றிருக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் சிராஜ்.
இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை சிராஜ் எடுத்திருந்தார். குறிப்பாக அனைவரின் இதயத்துடிப்பையும் எகிற செய்த கடைசி விக்கெட்டையும் அவர்தான் வீழ்த்தியிருந்தார். சிராஜூக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

சிராஜ் பேசியதாவது, “இது ஒரு அற்புதமான உணர்வாக இருக்கிறது. முதல் நாளிலிருந்து இப்போது வரை ஒவ்வொரு வீரரும் போராடியிருக்கிறோம். சரியான லெந்தில் தொடர்ந்து வீச வேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது.
காலையில் எழுந்தவுடன் மொபைலில் ‘Believe’ என்கிற வார்த்தையை பார்ப்பேன். ஹாரி ப்ரூக்கின் கேட்ச்சை பிடித்திருந்தால் போட்டி இவ்வளவு தூரம் வந்திருக்காது. லார்ட்ஸில் போட்டியை வெல்ல முடியாதது இதயத்தை நொறுக்கியது.

அப்போது, ‘உன்னுடைய அப்பாவை நினைத்துக் கொள். நீ கடந்து வந்த பாதையை, உன்னுடைய கடின உழைப்பை நினைத்துக் கொள்.’ என ஜடேஜா என்னிடம் சொன்னார். அப்போது என்னால் வெற்றியை தேடிக் கொடுக்க முடியவில்லை.’ என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…