Rajinikanth-Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி, திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் மதராஸி.

இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தியதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

Murugadoss - Madharasi
Murugadoss – Madharasi

Sivakarthikeyan ட்வீட்

இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், “மதராஸி படத்துக்காக என் முன்னுதாரணமான, என் தலைவர் ரஜினிகாந்த் சாரிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்றேன்” எனக் கூறியுள்ளார் சிவா.

மேலும் ரஜினிகாந்த் தெரிவித்த வார்த்தைகளையும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“ஓ மை காட், எக்ஸலண்ட்

என்ன பர்பாமன்ஸ்

என்ன ஆக்‌ஷன்

சூப்பர் சூப்பர் எஸ்.கே

எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டீங்க

காட் ப்ளஸ், காட் ப்ளஸ்” என ரஜினிகாந்த் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

“என் தலைவரிடமிருந்து இதயப்பூர்வமான வாழ்த்துகளும், அவரது ட்ரேட்மார்க் சிரிப்பும்… லவ் யூ தலைவா” என்றும் எழுதியுள்ளார்.

மதராஸி

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த், சபீர் கல்லரக்கல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அனிரூத் இசையமைத்துள்ளார். சிக்கந்தர் படத்தின் தோல்விக்குப் பிறகு இயக்குநர் முருகதாஸுக்கு கம்பேக்காக அமைந்துள்ளது மதராஸி.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest