65360824578

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி ரிலீஸாகிறது.

இதனைத் தாண்டி, தற்போது ‘பராசக்தி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பிலும் அவர் பங்கேற்று வருகிறார்.

இந்த ஆண்டின் நாஸ்காம் கூட்டத்தில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் பங்கேற்றிருந்தார்.

Parasakthi
Parasakthi

அதன் முழுக் காணொளி தற்போது யூட்யூபில் வந்திருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் சினிமா, குடும்பம் என இரண்டையும் சமாளிப்பது தொடர்பாகவும், தன்னுடைய குழந்தைகள் பற்றியும் பகிர்ந்திருக்கிறார் எஸ்.கே.

சிவகார்த்திகேயன் பேசும்போது, “எனக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நான் எப்போதும் அவர்களுடன் விளையாடுவேன்.

என் மனைவிதான் குழந்தைகளை முழுமையாகக் கவனித்துக் கொள்வார். அவருக்குதான் உண்மையான வலி தெரியும். நான் ஒரு கண்டிப்பான தந்தையும் கிடையாது.

இன்று இந்த நிகழ்வுக்கு என் மகளையும் அழைத்து வந்திருக்கிறேன். இங்கு நிறையப் பெண்கள் இருக்கிறார்கள்.

அவர்களிடமிருந்து இன்ஸ்பயராகத் தான் என் மகளை இன்று இங்கு அழைத்து வந்திருக்கிறேன்.

என் முதல் மகனுக்கு நான்கு வயதாகிறது. இரண்டாவது மகனுக்கு ஒரு வயதாகிறது. (சிரித்துக்கொண்டே) இந்திய மக்கள் தொகைக்கு நான் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறேன்.

படப்பிடிப்புத் தளங்களில் பயங்கரமான அழுத்தம் ஏற்பட்டு, வீட்டை அடையும்போது என்னுடைய குழந்தைகள்தான் என் அழுத்தத்தைக் குறைத்து மகிழ்விப்பார்கள்.

நான் இப்போது என் மகள் ஆராதனாவுடன் நண்பனாக இருக்கிறேன். சினிமா துறையைப் பொறுத்தவரை, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு வேலை இருக்கும்.

திடீரென, ஒரு மாதத்திற்கு உங்களுக்கு விடுப்பு கிடைக்கும். இப்போது குடும்பத்திற்காக என் நேரத்தைச் செலவழிக்கிறேன்.

ஆனால், நான் தொலைக்காட்சியில் இருந்தபோது எனக்கு அது கடினமாகவே இருந்தது. என் குழந்தைகளிடமிருந்து கிடைக்கும் அன்பு மிக உண்மையானது. எனக்கும் அந்த உண்மையான அன்புதான் தேவை,” எனப் பேசினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest