15691799-ee7f-4ade-8281-fb1af9619fc1

பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் மார்க் டெய்சியர், விர்ஜின் மீடியா O2 உடன் இணைந்து, ஸ்கின்கேஸ் என்ற தொலைபேசி உறையை உருவாக்கியுள்ளார்.

இந்த போன் கவர் சூரிய ஒளியில், அதிக யூவி கதிர்கள் வெளிப்படும் போது நிறம் மாற்றம் அடைந்து ஒரு வித்தியாசமான தோற்றத்தை உருவாக்குகிறது.

இதன் நோக்கம் என்ன?

வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் பலர் இதனை செய்வதில்லை. இதற்காக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஸ்கின் கேஸை பிரெஞ்சு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஸ்கின் கேஸ் சிலிக்கான் மற்றும் UV எதிர்வினை மூலக்கூறுகளில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 3d பிரிண்டிங் மற்றும் கை சிற்பத்தின் கலவையும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மூன்று தோல் நிறங்களில் வரும் இந்த ஸ்கின் கேஸ் சூரிய ஒளி படும்போது உண்மையான தோலை போன்று அது நிறம் மாறுகிறது. மனித தோலை போன்ற நுண்ணிய கோடுகளுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்துவதால் வெயிலின் தாக்கம் எந்த அளவு கடுமையானது என்பதை மக்கள் உணரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

விடுமுறை காலங்களில் மக்கள் தங்கள் போன்களை அதிகமாக பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சூரிய ஒளியின் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களை சான்ஸ்கிரீன் பயன்படுத்தத் தூண்டவும் இந்த ஸ்கின் கேஸ் உருவாக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தற்போது இந்த ஸ்கின் கேஸ் விற்பனைக்கு வரவில்லை என்றாலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இதனை உருவாக்கியுள்ளனர். இந்த புதுமையான முயற்சி மக்களிடையே கவனம் பெற்றுவருகிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest