SSVM-Native-image-02

இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் “மனிதநேயம் மற்றும் செயற்கை நுண்ணறிவை (AI) இணைத்து நமது உலகத்தை இன்று உருவாக்குதல்” என்பதாகும்.

மாநாட்டின் சிறப்பம்சங்கள்

இந்த மாநாடு தொலைநோக்கு பார்வையாளர்கள், மாற்றத்தை உருவாக்குபவர்கள், கல்வியாளர்கள் மற்றும் புதுமைப்படைப்பாளர்கள் ஆகியோரை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைத்தது. நெறிமுறைகள் மற்றும் முன்னேற்றத்தில் வேரூன்றிய எதிர்காலத்தை AI தொழில்நுட்பம் மூலம் எவ்வாறு இணைந்து உருவாக்க முடியும் என்பதை ஆழமாக ஆராய்ந்தது.

நிறுவனர் உரை

SSVM நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன் இந்த கருப்பொருளை சுருக்கமாக விளக்கினார்: “இந்தியாவின் எதிர்காலத்தை மனிதனால் மட்டுமோ அல்லது AI தொழில்நுட்பத்தால் மட்டுமோ உருவாக்க முடியாது. இரண்டின் இணைந்த முயற்சியால் மட்டுமே இதைச் சாதிக்க முடியும்.” என்றார். 

முக்கிய விருந்தினர்கள் மற்றும் அவர்களின் கருத்துகள்

புதுமை மற்றும் சேவை

திரு. ஜலாஜ் டானி (ஏசியன் பெயிண்ட்ஸ் இணை நிறுவனர்) பேசுகையில், “புதுமைப்படைப்பு மூலம் முன்னேற்றத்தை மட்டும் உருவாக்காமல், மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதையும் ஆராய வேண்டும். தொழில்நுட்பம் மனித நலனுக்காகவே இருக்க வேண்டும்” என்றார்.

கலை மற்றும் தொழில்நுட்பம்

புகழ்பெற்ற இந்திய கலைஞரான திரு. ஹர்ஷித் அகர்வால் (Google Artist) உரையாற்றுகையில், “தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விதிகளுக்கு அப்பாற்பட்ட கலை உருவாக்கத்தை நாம் முயற்சிக்க வேண்டும். AI மூலம் ஓவியங்கள் மற்றும் உருவங்களை மிகச் சிறப்பாக உருவாக்க முடிந்தாலும், மனிதப் படைப்பாற்றலை அது மிஞ்ச முடியாது. கலையின் உள்ளார்ந்த அழகு மனித அனுபவத்திலிருந்தே வருகிறது” என்று கூறினார்.

கல்வி மற்றும் மனிதநேயம்

SSVM நிறுவனங்களின் கல்வி இயக்குநர் திருமதி ஸ்ரீஷா மோகன்தாஸ் வலியுறுத்தியதாவது: “மாணவர்கள் தொழில்நுட்பத்தை சரியான வழியில் பயன்படுத்துவதன் மூலம் கற்கும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு, மனிதநேயத்துடனும் தைரியத்துடனும் செயல்பட வேண்டும். AI ஒரு கருவி மட்டுமே, அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நமது மனிதத்தன்மை வெளிப்படுகிறது” என்றார்.

திரைப்படத் துறையில் AI

“கூலி” போன்ற பல பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளைப் பெற்றுத்தந்த தமிழ் திரைப்பட இயக்குனர் திரு. லோகேஷ் கனகராஜ் கூறியதாவது: “கலைஞர்களை நடிக்க வைப்பதிலும், ஃபிரேம்களை உருவாக்குவதிலும் AI பெரிதும் உதவுகிறது. ஆனால், ஒரு மனிதனைப்போல் உணர்ச்சியுடன் கதையை AI-ஆல் விளக்க முடியாது. சினிமாவின் ஆன்மா மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது. தொழில்நுட்பம் நமக்கு உதவும் கருவி, ஆனால் கதை சொல்லும் கலை மனித இதயத்திலிருந்தே பிறக்கிறது” என்றார்.

இந்திய AI வேண்டுகோள்

திரு. ஜிபு எலியாஸ் (AI நெறிமுறையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்): “தற்போது AI மொழி மற்றும் கலாச்சார குறைபாடுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பிரதிபலிக்கும் ஒரு இந்திய AI-ஐ உருவாக்க வேண்டும்” என்றார்.  

விளையாட்டுகளில் AI

திரு. பிரகாஷ் படுகோன் (முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரர்): “விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி, வீடியோ பகுப்பாய்வு, ஊட்டச்சத்து திட்டமிடல் போன்ற அம்சங்களில் AI பெரிதும் உதவக்கூடும். ஆனால், அதைப் பயன்படுத்தி மனிதர்கள்தான் விளையாட்டுப் போட்டிகளில் வெல்ல வேண்டும்” என்றார். 

மாணவர் தொழில்முனைவோர் விருதுகள் – 2025

இளம் மனங்களை தொழில்முனைவோர் ஆக்குவதற்காக நடத்தப்பட்ட தொழில்முனைவோர் விருதுகள்-2025 இந்த மாநாட்டின் முக்கியச் சிறப்பம்சமாக அமைந்தது. அதில், வெற்றிபெற்ற… 

வெற்றியாளர்கள்:

  • முதல் இடம்: சின்மயா இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி, கோயம்புத்தூர் – ₹75,000 ரொக்கப் பரிசு

  • இரண்டாம் இடம்: ஸ்ரீ ரமணா அகாடமி, ராஜபாளையம்

  • மூன்றாம் இடம்: பிவிஎம் குளோபல்

விருது வழங்கல்

இந்த விருதுகளை டாக்டர் எஸ். ராஜசபாபதி (கங்கா மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறைத் தலைவர்), டாக்டர் மணிமேகலை மோகன் மற்றும் திருமதி ஸ்ரீஷா மோகன்தாஸ் ஆகியோர் வழங்கினர்.

டாக்டர் எஸ். ராஜசபாபதி தெரிவித்தார்: “மருத்துவர்களின் கைகளால் எட்ட முடியாத பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை ரோபோக்கள் மூலம் செய்ய முடியும்.” என்றார். 

இன்ஸ்பிரேஷனல் குரு விருதுகள்

நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைசிறந்த கல்வியாளர்களுக்கு இன்ஸ்பிரேஷனல் குரு விருதுகள் வழங்கப்பட்டன. SSVM நிறுவனங்களின் அறங்காவலர் திரு. மோகன்தாஸ் மற்றும் எஜூகேஷனல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இயக்குநர் திரு. நிதின் ஜெய் ஆகியோர் பல்வேறு விருதுகளை வழங்கினர்.

சிறப்பு விருந்தினர்கள்

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள்:

  • திரு. சஞ்சய் ஜெயின் – Google Education இந்தியத் தலைவர்

  • திரு. அங்கூர் வாரிகூ – எழுத்தாளர் மற்றும் WebVeda நிறுவனர்

  • திரு. சுரேஷ் நாராயணன் – நெஸ்லே இந்தியாவின் முன்னாள் தலைவர்

இந்த மாநாட்டு பற்றிய மேலும் விபரங்களை www.ssvmtransformingindia.com என்ற வலையதளத்தில் பெறலாம்.

SSVM டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் – மனிதநேயமும் செயற்கை நுண்ணறிவும் இணைந்த எதிர்காலத்திற்கான பயணம்

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest