
கௌதம் கணபதி இயக்கத்தில், பிக் பாஸ் தர்ஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சரண்டர்’.
அப்பீட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், மலையாள நடிகர்கள் லால், சுஜீத் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று( ஜூலை 23) சென்னையில் நடைபெற்று இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தர்ஷன், “ ஆரம்பத்தில் இருந்தே கௌதம் சார் என்னை ஒரு பெரிய ஹீரோ மாதிரிதான் நடத்தினார்.
முதல் நாள் படப்பிடிப்பில் அவரே என்னை தேடி வந்து காட்சிகளைச் சொன்னார். படப்பிடிப்பின் கடைசி நாள் வரைக்கும் என்னை அப்படிதான் நடத்தினார்.
இலங்கையில் இருந்தாலும் மன்சூர் அலிகான் சாரின் படங்களைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.
இந்தப் படத்தில் உள்ள சண்டைக் காட்சிகள் அதிக அளவில் பேசப்படும். சில விஷயங்கள் நடக்கும்போதுதான் தெரியும் யார் உண்மையான ப்ரெண்ட்ஸ், யார் உண்மையான ப்ரெண்ட்ஸ் இல்லை என்று.

அந்தவகையில் நான் சென்னைக்கு வந்ததில் இருந்து என்னை சிலர் நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் படத்திற்கு எல்லோரும் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறோம். இந்தப் படம் நிச்சயமாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…