
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தலைவன் தலைவி’.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 12) சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி, ” ‘தலைவன் தலைவி’ படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இந்த வாய்ப்பு கிடைத்ததை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்தப் படத்தில் ராகவர்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். விஜய் சேதுபதியின் தங்கச்சி கதாபாத்திரம் தான்.
இந்தப் படத்தில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இதுவரைக்கும் நான் நடிக்காத கதாபாத்திரமாக இருந்தது. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…