Gt8RoDnWAAAzCpG

ஆகஸ்ட் 8 – முக்கிய செய்திகள்!

* ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் காரணம் காட்டி இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்திருக்கும் நிலையில், புதினுடன் இன்று தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, “இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அதிபர் புதினை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

* அன்புமணி பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து, `அன்புமணி பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை’ என உத்தரவிட்டிருக்கிறது.

* அமலாக்கத்துறையானது வெறும் குற்றச்சாட்டு அடிப்படையில், தண்டனை இல்லாமலேயே பல ஆண்டுகளாக மக்களை சிறையில் அடைப்பதாக உச்ச நீதிமன்றம் காட்டம்.

* ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

* தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து கையெழுத்துடன் உறுதிமொழி பத்திரம் கொடுக்க வேண்டும் அல்லது பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய தேர்தல் ஆணையத்திடம், ராகுல் காந்தி தனது 5 முக்கிய கேள்விகளை முன்வைத்தார்.

* இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவிகிதம் வரிவிதித்த நிலையில், இந்தியா தங்களின் முக்கியமான கூட்டாளி என்றும், அது தொடரும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

* நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு கார்த்திக் என்ற ரசிகர் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள ரஜினி கோயிலில் 5,500-க்கும் மேற்பட்ட ரஜினி புகைப்படங்களை வைத்துக் கொண்டாட்டம்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest