
இன்றைய நாளின் (ஜூலை 27) முக்கியச் செய்திகள்!
-
பீகாரில் ஊர்க்காவல் படை தேர்வில் கலந்துக்கொண்டப் பெண் ஒருவர் மயங்கிய நிலையில், அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
இபிஎஸ் உடன் இணைவது குறித்து காலம் பதில் சொல்லாது, உரிய நேரத்தில் நான் பதில் சொல்வேன், ஆறு மாதத்திற்கு பின் எல்லாம் இறுதியான பிறகு தெரியவரும் என அமுமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.
-
உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பது திமுகவின் அரசியல் ஸ்டண்ட், மக்களுக்கு கொடுக்கும் அல்வா என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்.
-
இன்று அதிகாலையில் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சீனாவில் 1600 -க்கும் மேற்பட்ட ஆண்களிடம் பெண்ணைப் போல நடித்து பாலியல் உறவுக்கொண்ட வீடியோவை சமூக வலைதளங்களில் விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.
-
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்ட நிலையில், எம்.பி பிரியங்கா சதுர்வேதி ‘ரத்தத்தில் லாபம் பார்க்க நினைக்கிறீர்கள் நீங்கள்’ என பிசிசிஐ –யை விமர்சித்திருக்கிறார்.
-
விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்பட டிரைலர் வெளியான நிலையில், நடிகை ரஷ்மிகா மந்தனா வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

-
நீதிபதி ஜி ஆர்.சுவாமிநாதனை பற்றிய ஒரு புகார் மனுவிற்கான வழக்கில் அவரே அமர்வு நீதிபதியாக இருப்பதை எவ்வாறு அனுமதிப்பது? என மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் இருக்கும் மான்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் பலி.
-
கங்கை கொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
-
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பினார்.