Snapinst.app4724388055988286864306407853606874406802529n1080

அன்ஷிதா கூட யாரு?

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பாப்புலரான ஜோடி அர்னவ் – அன்ஷிதா. இருவரும் ஒரு சீரியலில் இணைந்து நடித்த போது அர்னவின் மனைவி திவ்யாவுக்கும் அன்ஷிதாவுக்கும் இடையில் பிரச்னை உண்டாகி, அந்தப் பிரச்னை வளர்ந்து போலீஸ் வரை போனதெல்லாம் ஊரறிந்த கதை.

பிறகு அர்னவ், அன்ஷிதா இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்றார்கள். ஆனால் அங்கு இருவருக்குமிடையிலான‌ உறவு கசக்க, புதிய நண்பராக அன்ஷிதாவுக்குக் கிடைத்தார் விஷால்.

அன்ஷிதா

பிக்பாஸ் முடிந்து வெளியில் வந்த பிறகு அர்னவை டிவியில் பார்க்க முடியாத சூழலில் அன்ஷிதாவுக்கு புதிய சீரியல் வாய்ப்பை வழங்கியிருக்கிறது விஜய் டிவி.

பிரவீன் பென்னட் இயக்கத்தில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் சீரியல் ஒன்றில் லீட் ரோலில் நடிக்கிறார் அன்ஷ். தொடரில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகர் யார் என்பது இன்னும் முடிவாகவில்ல்லையாம். சிலர் அர்னவே திரும்பவும் வரலாம் என்கிறார்கள். சிலரோ விஷால் ஜோடியாக கமிட் ஆனால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

யார் என்பது என்பது சீரியல் டெலிகாஸ்ட் ஆகும் நாளில்தான் தெரியவரும் போல.!

மும்பை பொண்ணு, நிச்சயிக்கப்பட்ட திருமணம்!

‘தமிழும் சரஸ்வதியும்’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் சையது சாயிஃபுல்லா. இவரது அம்மா நீலு நஸ்ரீனுமே நடிகைதான். சிங்கம்புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார் நீலு. சையதுக்கும் மும்பையைச் சேர்ந்த சம்ரீனுக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடந்தது.

sayed marraige

டிவி, சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்த திருமணம் குறித்து சையதிடம் கேட்ட‌ போது,

‘சம்ரீன் ஐ.டி.யில் ஒர்க் பண்றாங்க. சொந்த ஊர் மும்பை. என் அம்மா பார்த்து செலக்ட் பண்ணின பொண்ணு. அதனால நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான். இனிமேதான் காதலிக்கத் தொடங்கணும்’ என்கிறார்.

பிரியாணி மற்றும் இன்ன பிற..!

சுமார் இரண்டாயிரம் உறுப்பினர்கள் இருக்கும் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கவிருக்கிறது. மொத்தம் மூன்று அணிகள் போட்டியிட நடிகை ஆர்த்தியும் அவரது கணவர் கணேஷ்கரும் சுயேட்சையாக களம் இறங்கியிருக்கின்றனர். போஸ்டர், பேனர், வீடியோக்கள் என தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் தீவிரமாக இருக்கும் ஒவ்வொரு அணியினரும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்தி அமர்க்களப் படுத்தி வருகிறார்கள். இந்தக் கூட்டங்களுக்கு வரும் கூட்டத்தை வைத்தே தங்களூக்கு கிடைக்க இருக்கும் வாக்குகள் குறித்து ஒரு முடிவுக்கு வந்துவிடலாமென்பதால் வருபவர்களூக்கு பிரியாணி விருந்து மற்றும் இன்ன பிற கவனிப்புகளையும் செய்து ஜமாய்க்கிறார்களாம்.

dhinesh team

தினேஷ் அணி கடந்த புதன் கிழமை இந்தக் கூட்டத்தை சென்னை விருகம்பாக்கத்திலுள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் சின்னத்திரை நடிகர் சங்கத்தை தோற்றுவித்த மறைந்த நடிகர் வசந்த்தின் குடும்பத்தை மேடையேற்றினார்கள் இவர்கள். மூன்று அணியினருமே வசந்த் பெயரைப் பயன்படுத்தி ஒட்டு கேட்டு வரும் சூழலில் அவரது குடும்பத்தை மேடையேற்றியதை ஹைலைட்டாக குறிப்பிடுகிறது தினேஷ் அணி.

இன்று மாலை அதே இடத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது பரத் அணி. நிரோஷா அணி சமூக நலக் கூடம் ஒன்றில் நேற்று நடத்துவதாக அறிவித்திருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் என்பதால் அவர்கள் அவசர அரசு நிகழ்ச்சி எனச் சொல்லி நேற்று இடம் தர மறுத்து விட்டார்களாம். தேர்தலுக்கு முன் கூட்டத்தை நடத்த வேறு இடம் தேடி வருகிறாரகளாம் இவர்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest