
பின்தொடரும் தொண்டர்கள்
காவல்துறை அறிவிப்பை மீறி விஜய்யின் வாகனத்தைத் தொண்டர்கள் பின் தொடருகின்றனர். விஜய்யின் வாகனத்தின் முன்னும், பின்னும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலமும் தொண்டர்கள் பின் தொடருகின்றனர்.
வாஞ்சூர் நோக்கி விஜய்
நாகை மாவட்டத்திற்கு பரப்புரை மேற்கொள்ள வந்திருக்கும் விஜய், வாஞ்சூர் நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார். விஜய்யின் வாகனத்தைத் தொண்டர்கள் பின் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பரப்புரை செய்ய உள்ளார்.
காலை 11 மணி அளவில் நாகையில் உள்ள புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு அருகிலும், பிற்பகல் 3 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியிலும் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார் விஜய்.
நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய் தனி விமானம் மூலம் திருச்சியை வந்தடைந்தார். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக அவர் நாகை செல்கிறார்.

நாகையில் பரப்புரை செய்யும் இடத்திற்கு வந்துள்ள விஜய் தேர்தல் பரப்புரை வாகனத்தில் இருந்து தனது இரண்டாவது கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாகூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் நாகை அண்ணாசாலை இடத்தில் குவிந்துள்ளனர்.
கொண்டாட்டத்தில் தொண்டர்கள்
விஜய் நாகை வந்தடைந்த நிலையில் தவெக கொடியை அசைத்தும் நடனமாடியும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜய் பேச இருக்கும் இடத்தில் கூடியுள்ள தொண்டர்கள்







