
இங்கிலாந்தில் அடுத்த பொதுத்தேர்தல் முதல், வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 16-ஆக தளர்த்தி் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ராணுவம் முதல் பல இடங்களில் பணியாற்றும் 16,17 வயது இளைஞர்களுக்கு வாக்குரிமை அளிப்பதே நியாயமாக இருக்கும் என முடிவெடுத்துள்ளது அரசு.
எந்தெந்த நாடுகளில் 16 வயதினருக்கு வாக்குரிமை உள்ளது?
ஐக்கிய ராச்சியத்தில் (UK) ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் முறையே 2015, 2020ல் 16 வயதினருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தது.
பிரேசில் நாட்டில் 1988 முதலே 16 வயதினருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டு வருகிறது. முதல் ஐரோப்பிய நாடாக ஆஸ்திரியாவில் 2007ல் 16 வயதினருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மால்டா, ஜெர்மனி, பெல்ஜியம், எஸ்டோனியா, அர்ஜெண்டீனா, ஈக்குவேடார் போன்ற உலக நாடுகளிலும் 16 வயது முதல் வாக்குரிமை அளிக்கப்பட்டது.
இந்தியாவில் 16 வயதினருக்கு வாக்குரிமை அளிக்கலாமா என்பது குறித்த உங்கள் கருத்துக்களை கமண்டில் தெரிவியுங்கள்!
தேர்தலில் நம்பிக்கைத் தரும் மாற்றங்கள்!
இளம் வயதினருக்கு வாக்குரிமை அளிப்பதுடன் வாக்காளர் அடையாள அட்டை பெறும் வழிமுறைகளை எளிமையாக்கியுள்ளனர்.
வெளிநாட்டு அரசியல் தலையீடு மற்றும் வேட்பாளர்களை துஷ்பிரயோகம் செய்வதிலிருந்து பாதுகாக்கக் கடுமையான புதிய விதிகளை அறிமுகப்படுத்துவது என பல்வேறு மாற்றங்களை மேற்கொள்கின்றனர்.
இந்த மாற்றங்கள் பல்வேறு தரப்பு மக்கள் இங்கிலாந்தின் ஜனநாயகத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டுவந்ததாகவும், தேர்தல்களின் மாண்பைக் காக்கும் நடவடிக்கைகள் மூலம் நாட்டின் எதிர்காலத்துக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதாகவும் பெருமிதம் கொண்டுள்ளார் துணை பிரதமர் ஏஞ்சலா ரெய்னர்.

இங்கிலாந்து தேர்தல்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் பணம் செல்வாக்கு செலுத்துவதைக் கடுமையாக கட்டுப்படுத்தும் விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஐக்கிய ராச்சியத்தைச் சேர்ந்த எந்த நிறுவனமும் எந்த கட்சிக்கும் தேர்ந்தல் நன்கொடை அளிக்க முடியும். ஆனால் அவை வெளிநடுகளிலிருந்து பணம் ஈட்டுபவையா என்பது கிராஸ் செக் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் பணக்காரர் எலான் மஸ்க், ரிஃபார்ம் யுகே கட்சிக்கு 100 மில்லியன் டாலர்கள் அளிப்பதாகப் பேசியது வெளிநாட்டு பணம் நாட்டின் தேர்தலில் தாக்கம் செலுத்தும் அபாயம் குறித்து கவலைகளை எழுப்பியது.
இப்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிகளின்படி அவரால் தேர்தல் நன்கொடை கொடுக்க முடியாது என்கிறது கார்டியன் செய்தி தளம். இத்துடன் சட்டவிரோத தளங்களிலிருந்து வரும் நன்கொடைகளை கட்டுப்படுத்தவும், வேட்பாளர்கள், பிரசாரகர்கள் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சட்டதிருத்தங்களை மேற்கொண்டுள்ளனர்.