trump-rutte

இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகள் ரஷ்யா உடன் தொடர்ந்து வணிக உறவுகளைப் பேணுவதனால் இவற்றின்மீது இரண்டாம் நிலை பொருளாதார தடைகள் போடப்படும் என எச்சரித்துள்ளார் NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே.

அமெரிக்க காங்கிரஸில் செனட்டர்களுடனான சந்திப்பில் இந்த மூன்று நாடுகள் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசி, உக்ரைன் உடனான அமைதிப்பேச்சுவார்த்தையை அவர் சீரியஸாக எடுத்துக்கொள்ளச் செய்யவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Mark Rutte
Mark Rutte

“இந்த மூன்று நாடுகளுக்கும் நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் பெய்ஜிங் அல்லது டெல்லியில் வசிப்பவராக இருந்தால், பிரேசில் அதிபராக இருந்தால் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவவேண்டியது மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால், இது உங்களையும் கடுமையாக பாதிக்கக்கூடும்” எனப் பேசியுள்ளார் அவர்.

மேலும் அவர், “எனவே தயவுசெய்து விளாடிமிர் புதினுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அவர் தீவிரமாக ஈடுபட வேண்டும் எனச் சொல்லுங்கள், இல்லையெனில், இது பிரேசில், இந்தியா மற்றும் சீனா மீது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றும் கூறியுள்ளார்.

Trump, Rutte
Trump, Rutte

முன்னதாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இன்னும் 50 நாட்களுக்குள் இதில் ஒரு சமாதானம் எட்டப்படவில்லை என்றால், ரஷ்யாவின் ஏற்றுமதிகளை வாங்கும் நாடுகள் மீது 100% பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இரண்டாம் நிலை வரி விதிக்கப்படுமெனப் பேசியதைத் தொடர்ந்து நேட்டோ பொதுச் செயலாளரும் அதேக் கருத்தைப் பேசியுள்ளார்.

சமாதானப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் நல்ல இடத்தில் இருப்பதை உறுதி செய்ய ஐரோப்பா நிதி வழங்கும் என்றும் அவர்க் கூறியிருந்தார்.

ட்ரம்ப் மற்றும் நேட்டோ இடையே ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதனால் உக்ரைனுக்கு அமெரிக்கா சார்பில் வான் பாதுகாப்பு அமைப்புகள் மட்டுமல்லாமல் ஏவுகனைகளும், (ஐயோப்பாவின் பொருட்செலவில்) வெடிமருந்துகளும் பெருமளவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest