68b23ba12b458

2022-23 நிதியாண்டுக்கான மாநிலங்களின் பொருளாதாரச் செயல்திறன் குறித்து இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை (CAG) அறிக்கை வெளியாகியிருக்கிறது.

இதில், அதிக வருவாய் உபரி கொண்ட மாநிலங்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. மொத்தமாக 16 மாநிலங்கள் வருவாய் உபரி கொண்ட மாநிலங்களாக இருக்கின்றன.

இந்தப் பட்டியலில் 16 மாநிலங்களில் டாப் 3 மாநிலங்கள் உட்பட 10 மாநிலங்கள் பா.ஜ.க ஆட்சி நடைபெறும் மாநிலங்கள்.

இந்திய தலைமை கணக்கு தணிக்கை (CAG)
இந்திய தலைமை கணக்கு தணிக்கை (CAG)

அதேபோல், அதிக வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவதாக இருக்கிறது.

இதில், 12 மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையுடன் இருக்கின்றன. இதில் 6 மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது.

வருவாய் உபரி கொண்ட டாப் 10 மாநிலங்கள்!

1) உத்தரப்பிரதேசம் – ரூ. 37,000 கோடி

2) குஜராத் – ரூ. 19,865 கோடி

3) ஒடிசா – ரூ. 19,456 கோடி

4) ஜார்கண்ட் – ரூ. 13,564 கோடி

5) கர்நாடகா – ரூ. 13,496 கோடி

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

6) சத்தீஸ்கர் – ரூ. 8,592 கோடி

7) தெலுங்கானா – ரூ. 5,944 கோடி

8) உத்தரகண்ட் – ரூ. 5,310 கோடி

9) மத்தியப் பிரதேசம் – ரூ. 4,091 கோடி

10) கோவா – ரூ. 2,399 கோடி

இவை தவிர அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களும் வருவாய் உபரி கொண்ட மாநிலங்களாக இருக்கின்றன.

வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலங்கள்!

1) ஆந்திரப் பிரதேசம் – ரூ. 43,488 கோடி

2) தமிழ்நாடு – ரூ. 36,215 கோடி

3) ராஜஸ்தான் – ரூ. 31,491 கோடி

4) மேற்கு வங்கம் – ரூ. 27,295 கோடி

5) பஞ்சாப் – ரூ. 26,045 கோடி

6) ஹரியானா – ரூ. 17,212 கோடி

ஸ்டாலின்
ஸ்டாலின்

7) அஸ்ஸாம் – ரூ. 12,072 கோடி

8) பீகார் – ரூ. 11,288 கோடி

9) இமாச்சலப்பிரதேசம் – ரூ. 6,336 கோடி

10) கேரளா – ரூ. 9,226 கோடி

11) மகாராஷ்டிரா – ரூ. 1,936 கோடி

12) மேகாலயா – ரூ. 44 கோடி

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest