ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
டேராடூனில் இருக்கும் இந்திய இராணுவ அகாடமி, எழிமலா இந்திய கடற்படை அகாடமி, ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமி ஹைதராபாத், சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமி ஆகியவற்றில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை.
இவற்றில் சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமி பணிக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயமாக திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 451
வயது வரம்பு: 20 – 24
சம்பளம்: ரூ.56,100 – 1,75,000

கல்வித் தகுதி: இந்திய இராணுவ அகாடமி மற்றும் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் சேர ஏதேனும் டிகிரி பெற்றிருந்தால் போதுமானது.
இந்திய கடற்படை அகாடமியில் சேர இன்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும்.
விமானப்படை அகாடமியில் சேர 12-ம் வகுப்பில் இயற்பியல், கணிதம் படித்திருக்க வேண்டும் மற்றும் ஏதேனும் டிகிரி அல்லது இன்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்து தேர்வு, நுண்ணறிவு மற்றும் ஆளுமைத் தேர்வுக்கான நேர்காணல்
தேர்வு மையங்கள் எங்கே?
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர்.
விண்ணப்பிக்கும் இணையதளம்: upsconline.nic.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30, 2025
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இதை பதிவிறக்கம் செய்யவும்.