Vijay-Suriya-sethupathi-anal-arasu

நடிகர் விஜய் சேதுபதியின் மகன், சூர்யா சேதுபதி நடிப்பில் பீனிக்ஸ் திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது.

சண்டைப் பயிற்சி இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா சேதுபதி முதல்முறை நாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் திரைப்படத்தை நடிகர் விஜய் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

Vijay சந்திப்பு – சூர்யா சேதுபதி பதிவு!

இது தொடர்பாக சூர்யா சேதுபதி,

“நன்றி விஜய் சார்.

கடைசி அணைப்பு, அன்பான வார்த்தைகள், அரவணைப்பு – இவை எல்லாமே மிகவும் முக்கியமானவை. நான் எப்போதும் உங்களை மதித்து பார்த்திருக்கிறேன், இந்த பயணத்தில் உங்கள் ஆதரவை உணர்வது எனக்கு மறக்க முடியாத ஒன்று. #ThalapathyVijay” எனப் பதிவிட்டுள்ளார் சூர்யா சேதுபதி.

அனல் அரசு, சூர்யா மற்றும் விஜய் இருக்கும் புகைப்படத்தை இணைத்திருக்கிறார்.

பீனிக்ஸ் திரைப்படம் ஜுலை 4ம் தேதி வெளியாகவிருக்கிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest