
டிஜிட்டல் விருதுகள் 2025
டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்’ விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது விகடன்!
`Best Solo Creator – Male’, `Best Solo Creator – Female’, `Best Couple Creator’ என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகளின் ஒவ்வொரு பிரிவின் நாமினேஷனுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது.
யூட்யூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் பலரும் அந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். கோலாகலத்திற்குப் பஞ்சமின்றி பிரமாண்டமாக இந்த விருது விழா வருகிற செப்டம்பர் 13-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. நம் ஃபேவரைட் சோசியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு விருது பெறவிருக்கிறார்கள்.
இப்போது, விருதுகளை வெல்லப் போகும் வெற்றியாளரையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் நம் விகடன் இணையதளத்தில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்துப் பார்க்கலாம்.
Best Info Channel
இப்பிரிவில் தேநீர் இடைவேளை, சேரன் அகாடமி, கபிலன், உங்கள் அன்பன் ஹேமந்த், மாயம் ஸ்டுடியோஸ், சரவணன் டீகோட்ஸ், Buying Facts, Akshaytenacious, Biscuits With Tea, Minutes Mystery ஆகிய சேனல்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஜூரிகளின் தேர்வுபடி இந்தப் பிரிவின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, `தேநீர் இடைவேளை’ சேனல்!

Best Info Channel – Theneer Idaivelai
நாம் சந்திக்கும் அன்றாட சிக்கல்களைப் பிரதிபலிக்கும் காட்சிக் கோர்வைகள், கேள்விகள், அவற்றுக்குத் தெளிவான பதில்கள் என அனைத்தும் ‘தேநீர் இடைவேளை’-யின் அசுர பலம். தட்கல் டிக்கெட் தொடங்கி, தங்கத்தின் தரம் வரை அலசி ஆராயும் இவர்களின் வீடியோக்கள், விரிவான அறிவுக் களஞ்சியங்கள்.

நம் தோள் உரசும் நண்பனின் முகம் கொண்டு இணைய உலகில் வளைய வரும் ‘தேநீர் இடைவேளை’ குழுவுக்கு Best Info Channel விருது வழங்கி பெருமகிழ்ச்சி கொள்கிறது விகடன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…